Coimbatore

News October 20, 2024

சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு

image

கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகளை நேற்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

மாநகரில் தொற்றுநோய் பரவும் அபாயம்

image

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தினமும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. வாரம் இருமுறை குப்பைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் மட்டும் 20 நாள்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாததால், குப்பைகள் மலைபோல் குவிந்து கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News October 19, 2024

கருக்கலைப்பு மாத்திரைகள்:  திடீர் சோதனை

image

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட நல பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு இன்று நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மருந்து கடைகள் கிளினிக்குகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எந்தவித சட்டம் விரோத செயல்பாடுகள் நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை.

News October 19, 2024

இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டே இருக்கிறார்

image

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அப்போது அவர் பேசுகையில், இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டே இருக்கிறார், ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார் என்றார்.

News October 19, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கோவை மாவட்டத்தில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், காலை 10:30 மணிக்கும், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 19, 2024

BREAKING: சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

image

கோவை, வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களின் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 19, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கோவை மாவட்டத்தில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், காலை 10:30 மணிக்கும், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 19, 2024

ரீல்ஸ் பண்ண ரெடியா? உடனே அனுப்புங்க

image

போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், கோவையில் இளைஞர்களே ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகளில் பங்கேற்கலாம். இதற்கு வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பலாம். tndiprmediahub@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். எனவே, கோவை இளைஞர்களே இதை ஷேர் பண்ணுங்க

News October 19, 2024

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில்

image

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை உக்கடம் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் பணி தமிழகத்திலே கோவையில் தான் முதல் முறை. எக்காரணத்தை கொண்டும் தண்ணீரில் மூழ்காது. காற்று, மழையால் எவ்வித பாதிப்பு ஏற்படாது என்றனர்.

News October 18, 2024

‘ஈஷா யோகா மையத்தில் விசாரிக்க தடை இல்லை’

image

ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள தடை இல்லை’ என தெரிவித்தனர். வழக்கு விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.