Coimbatore

News May 7, 2024

கோவையில் நாளை வழிகாட்டி நிகழ்ச்சி

image

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாளை (08/05/24) பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை,இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.30 முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் துறை சார்ந்த வல்லுனர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த துறையில் என்ன வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை , வங்கி கடன் பெறுவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

News May 7, 2024

மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொது தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 9ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 7, 2024

பெண் யானை ரயில் மோதி பலி

image

கேரள மாநிலம் பாலக்காடு பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் யானை ஒன்றிற்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

பொள்ளாச்சி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மேலும் இக்கல்லூரி உள்ள உதவி மையத்தை அணுகலாம். BC, MBC, டிஎன்சி, BC (M) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48,பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் SC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

தொடர்ந்து 6 வது ஆண்டாக 100% தேர்ச்சி.

image

மேட்டுப்பாளையத்தில் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 144 மாணவிகள் நேற்று வெளியான +2 தேர்வு முடிவில் 144 பேருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வர்ஷினி 567 மதிப்பெண்களும், அர்ச்சனா 553 மதிப்பெண்களும், சூர்யா 534 மதிப்பெண்களும், ஆயிஷா அஸ்மிதா 528 மதிப்பெண்களும், பிரதீக்‌ஷா 525 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 6வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

நான்காவது இடத்தைப் பிடித்த கோவை

image

தமிழ்நாட்டில் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருப்பூர் 97.45 % பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 97.59% பெற்று 2 ஆம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் 97.25 % பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் 96.97 % பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது . கடந்தாண்டு 97.57 % பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

முதல்வர் கண்ணாடி போட்டு அவர் அறிக்கையை படிக்க வலியுறுத்தல்

image

வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்ட பத்திரிகை சுதந்திர தின செய்தியை கண்ணாடி முன் நின்று அவர் படித்துப் பார்க்க வேண்டும். மேலும் சவுக்கு சங்கர் திமுகவைவிட பாஜகவை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பவர். பாஜக தலைவர்களைப் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சவுக்கு சங்கர் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்ததும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

News May 6, 2024

ட்ரோன் பறக்க தடை விதித்த மாவட்ட ஆட்சியர்

image

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு இன்று முதல் மே.10ஆம் தேதி வரை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம் தற்காலிக ரெட் சோன் இப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கோவை: 96.97% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கோவை மாவட்டத்தில் 96.97% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.71 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.01 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

error: Content is protected !!