India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதில், கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பாக நேற்று கோவை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவான வாக்குகள் 94 வாக்கு எண்ணும் மேஜைகளில் 134 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. செய்தியாளா்களுக்கு தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரிவர இல்லாமல் இருப்பதால் காலநிலை மாற்றத்தினால் மழை காலங்களில் மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது. மழை நீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்றார்.
ஜீவன் ரக் ஷா விருது என்பது துணிச்சலுடன், தாமதம் இன்றி உயிரை காப்பாற்றியதற்காக வழங்கப்படும் விருதாகும். 2024 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 28 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோவை மருதமலை ஐஓபி காலனியை சோ்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை இணை ஆணையர் சிவகுமாா் (61). இதேபோல் வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சகஸ்ராம சுப்பிரமணி (73). இவர்களிடம் சில தினங்களுக்கு முன் போனில் பேசிய மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ.1.27 கோடி வங்கி கணக்கில் பெற்று பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (18) கல்லூரி மாணவர். விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர் சந்தோஷ் உடன் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். புதுக்காடு எஸ்டேட் வழியாக பைக்கில் வந்தபோது வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள் இவர்களை தாக்கியது. இதில் யானை தாக்கியதில் முகேஷ் உயிரிழந்தார். வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக அவனி ரீச் 24 கட்டிட கலை சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமில் கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான செயல் விளக்கம் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் மூலம் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கோலாலம்பூர் நகரில் சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் கோட்டூர் மலையாண்டி பட்டினம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் 17 பதக்கங்களை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இன்று கோவை வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித்குமார் ஜெயின் , மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர்கள் முருகேசன், கருப்பசாமி உள்ளனர்.
உடையாம்பாளையத்தில் புதிதாக நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் இந்நிலையில் இன்று உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குமார், மனோஜ் ஆகியோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.