India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் (மே.9) இன்று ஆய்வு செய்தார். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறை (Strong Room) மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா உடன் இருந்தார்.
கோவை, பொள்ளாச்சியில் இரண்டு வாரங்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பை படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு உள்பட போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை எப்படி உள்ளது என்பது பற்றி கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விபத்துக்கள் மூலம் கடந்த 2023ஆம் ஆண்டில் 819 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை விபத்தில் 685 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா கோவில், மெக்ரிகர் சாலை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது. அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ஆம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி கோவையில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அன்னூர் அருகே சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த வங்கதேச இளைஞர்கள் 2 பேரை போலீசார் (மே.9) கைது செய்தனர். மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சட்ட விரோதமாக தங்கி வங்கதேச இளைஞர்கள் பணியாற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த முகமது அர்ஜு (26), போலாஸ் பர்மன்(28) இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிங்கப்பூர் – கோவை விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,ஒரு பயணி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.அவரிடமிருந்து ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவரின் விபரம் அதிகாரிகள் வெளியிடவில்லை.
கம்போடியாவில் இருந்து கடந்த 5ம் தேதி, கோவைக்கு வந்த விமானத்தில் இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உடமைக்குள் ரூ.4.48 லட்சம் மதிப்பிலான 26 ஆயிரத்து, 400 சிகரெட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம்
தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு கால முதியோர் இல்லங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். எனவே உரிய ஆவணங்களுடன் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.