Coimbatore

News June 4, 2024

கோவையில் திமுக முன்னிலை!

image

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமரா 73,239 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 58,805 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் 30,978 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 10,308 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 1481 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

News June 4, 2024

பொள்ளாச்சி : 3வது சுற்று முடிவுகள்

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி மூன்றாவது சுற்றில் 24934 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 15925 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 11626 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 3070 வாக்குகள் பெற்றுள்ளார்.
மூன்றாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி வாக்குகள் 25863 முன்னிலை பெற்றுள்ளார்.
நோட்டாவுக்கு 774 வாக்குகள் பதிவானது

News June 4, 2024

கோவை: 3ஆம் சுற்று முடிவு

image

கோவை மக்களவைத் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவு: திமுக – 26460, பாஜக – 19868, அதிமுக – 10487, நாதக – 3747, நோட்டா -578, வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கை: 62100 வாக்குகள்

News June 4, 2024

கோவை: திமுகவினர் இனிப்பு வழங்கி உற்சாகம்

image

கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தற்போது வரை முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்த்து திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தற்போது பீளமேடு பகுதியில் அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வருகின்றார். திமுக வெற்றி உறுதி செய்யபட்டு விட்டது என பொதுமக்களிடம் கூறி வருகிறார்.

News June 4, 2024

கோவை: வைரலாகும் போலி செய்தி

image

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பாகம் எண் 4-ல் 1 வாக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் பொய்யானது. கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 4-ல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 101 வாக்குகள் பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.

News June 4, 2024

பொள்ளாச்சி இரண்டாம் சுற்று முடிவு

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில்,
2-வது சுற்று முடிவில்,
பொள்ளாச்சி – திமுக 7108- அதிமுக- 4757 பாஜக- 4554, கிணத்துக்கடவு-திமுக 8787, அதிமுக 5675, பாஜக 6491
மடத்துக்குளம்- திமுக 4122 , அதிமுக 2350, பாஜக 1272, தொண்டாமுத்தூர்-திமுக 8790, அதிமுக 7850, பாஜக 3831
வால்பாறை-திமுக 4610, அதிமுக 2566, பாஜக 1690, உடுமலை- திமுக 3855, அதிமுக 2306, பாஜக 1137 வாக்குகள் பதிவாகியுள்ளது

News June 4, 2024

கோவை: முதல் சுற்று நிலவர சுற்றறிக்கை

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கோவை தெற்கு DMK 5127, ADMK 1541, BJP 1852 கோவை வடக்கு Dmk 3210, Admk 1536, Bjp 3161 சூலூர் DMK- 4282, BJP – 3834
ADMK – 2637 திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 17,255 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் 8,860 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

News June 4, 2024

கோவையில் அண்ணாமலை முன்னிலை

image

கோவை தொகுதி பொருத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியின் நிலவி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை முன்னிலையில் உள்ளார் நகரப் பகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

News June 4, 2024

கோவை தெற்கு தொகுதியில் திமுக

image

கோவை மக்களவை தொகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் திமுக முன்னிலையில் உள்ளது. பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திமுக முதல் இடம் – 5127; பாஜக இரண்டாம் இடம் – 1852; அதிமுக மூன்றாம் இடம் – 1541.

News June 4, 2024

கோவையில் EVM கோளாறு – ஆய்வு

image

கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமனற் தொகுதியில் 13ஆம் நம்பர் மேஜையில் இவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.ERROR என்று காட்டியத்ஹல் ஏஆர்ஓ தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யபட்டு வருகிறது.

error: Content is protected !!