Coimbatore

News June 4, 2024

கோவை தொகுதியில் திமுக வெற்றி..!

image

கோவை மக்களவை தொகுதி 20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 20வது சுற்று முடிவின் படி திமுக 507018 வாக்குகளும், பாஜக 405736 வாக்குகளும் அதிமுக 208238 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 75580 வாக்குகளும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 101282 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி!

image

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,12,534 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3,99,354, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,12,178 வாக்குகளும், நாதக வேட்பாளர் 62,130 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர். அண்ணாமலை 1,13,180 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

News June 4, 2024

பொள்ளாச்சி :14வது சுற்றில் திமுக முன்னிலை

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி 14ஆவது சுற்றில்
26,615 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 11,000 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 11,974 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2868 வாக்குகள் பெற்றுள்ளார்.
14-வது சுற்று முடிவில் திமுக 160037 முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 694 வாக்குகள் பதிவானது.

News June 4, 2024

கோவையில் அண்ணாமலை பின்னடைவு

image

கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். காலை எட்டு மணி முதல் வாக்குகள் எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

பொள்ளாச்சி : 10 வது சுற்றில் திமுக முன்னிலை

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வர சாமி 10 வது சுற்றில் 25,978 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 12,596 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 10,651 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2828 வாக்குகள் பெற்றுள்ளார். 10-வது சுற்று முடிவில் திமுக 96648 முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 717 வாக்குகள் பதிவானது.

News June 4, 2024

கோவையில் ஆடு பிரியாணி வழங்கிய திமுகவினர்

image

கோவையில் திமுக வெற்றி பெற்றால் அனைவருக்கும் ஆடு பிரியாணி போடபடும் என்று திமுகவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது திமுக வெற்றியடையும் தருவாயில் உள்ளது இதனை கொண்டாடும் வகையில் தற்போது, கோவை கோட்டைமேடு பகுதியில் இரண்டு ஆடுகளுடன், ஆட்டுக்கறி பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

News June 4, 2024

கோவையில் 5வது சுற்று நிலவரம்

image

கோவை மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஐந்தாவது சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் தற்போது, திமுக 127784 வாக்குகளும், பாஜக 102785 வாக்குகளும்,
அதிமுக 53811 வாக்குகளும் , நாம் தமிழர் 18380 வாக்குகளும் பெற்றுள்ளது. திமுக 25 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது.

News June 4, 2024

பொள்ளாச்சி : 7 வது சுற்று முடிவு

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி 7ஆவது சுற்றில்
23915 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அ. கார்த்திகேயன் 14066 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கே.வசந்தராஜன் 13530 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா. சுரேஷ்குமார் 2855 வாக்குகள் பெற்றுள்ளார். 7ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி வாக்குகள் 61397 முன்னிலை

News June 4, 2024

பொள்ளாச்சி : 6 வது சுற்று முடிவுகள்

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி 62ஆவது சுற்றில்
23474 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 15361 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 11415 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 3092 வாக்குகள் பெற்றுள்ளார். 6 -வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் வாக்குகள் 51548 முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 730 வாக்குகள் பதிவானது

News June 4, 2024

பொள்ளாச்சி: 5ஆவது சுற்று முடிவுகள்

image

பொள்ளாச்சி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5வது சுற்றில் திமுக- 1,21,367, அதிமுக -77,932 , பாஜக – 54,939, நாம் தமிழர் -14,419 வாக்குகள் பெற்றுள்ளது. 43,435 வித்தியாத்தில் திமுக கே.ஈஸ்வரசாமி முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!