India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்- 5,68,200 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் அண்ணாமலை- 4,50,132 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்- 2,36,490 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கலாமணி- 82,657 வாக்குகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
கோவை தொகுதியின் பிரதான வேட்பாளர்களான திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அண்ணாமலை வராதது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. அடிக்கடி மீடியாக்களை சந்திக்கும் அண்ணாமலை நேற்று மீடியாக்களையே சந்திக்கவில்லை என்பது விவாத பொருளாகியுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மெய்யழகன். இவர் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குழந்தைகளின் புகைப்படம், மற்றும் பெற்றோரின் விவரம் அடங்கிய பள்ளி புத்தகங்களில் ஒட்டக்கூடிய கியூ ஆர் கோட் லேபிள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது தற்போது குழந்தைகள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புது முயற்சி வரவேற்கத்தக்கது என பெற்றோர்கள் கருதுகின்றனர்.
கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தது தான் இந்த அடையாளங்கள். முதலமைச்சருக்கு தான் இந்த பெருமை அனைத்தும். முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என்றார்.
கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி கணபதி ராஜ்குமாருக்கு வழங்கினார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கோவை தொகுதியில் வாக்களித்து அன்பையும் ஆதரவையும் அள்ளி தந்திருக்கும் மக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் ராஜ்குமாருக்கு வாழ்த்துக்கள். தொகுதி வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பேன் . கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என பாஜக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி 15 ஆவது சுற்றில்
25789 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 12376 வாக்குகள், பாஜக 10140 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 2941 வாக்குகள் பெற்றுள்ளது. 14 ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி 173450 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நோட்டாவுக்கு 654 வாக்குகள் பதிவானது.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 530128 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 279966 வாக்குகள் பெற்றுள்ளார்.பாஜக வேட்பாளர் 221770 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
கோவை மக்களவை தொகுதி 20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 20வது சுற்று முடிவின் படி திமுக 507018 வாக்குகளும், பாஜக 405736 வாக்குகளும் அதிமுக 208238 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 75580 வாக்குகளும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 101282 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.