India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம், கோவை மாநகராட்சி இணைந்து கூடைப்பந்து மைதானத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்து கடந்த மார்ச் மாதத்தில் பணியை துவங்கினர். மைதானம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு நேற்று அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிக்காக திறக்கப்பட்டது. கூரையில் 50 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை தனியார் மருத்துவமனை தின விழாவை முன்னிட்டு ஊழியர்களுக்கு த்ரோபால், டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டி வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவமனை மனிதவள மேம்பாட்டு அலுவலர் விஜயகுமார் பரிசுகளை வழங்கினார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமான நிலையத்தில் நேற்று பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரரான ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஜி.சக்ரதாா் (34), கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டங்களில் தோட்டக்கலை மற்றும் பயிர்த் தோட்டத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறிய கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் பூச்சி நோய் தாக்கிய 10 ஆயிரம் மரங்கள் உள்ளதால், கோவை விவசாயிகளுக்கு அரசு ரூ.14 கோடி நிவாரணம் அறிவித்தது மேலும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நட்சத்திர தொகுதியான கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக-வின் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக-வின் அண்ணாமலையும் தோல்வி அடைந்தனர். கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பின் திமுக நேரடியாக களம் கண்டு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 1 முறையும், சிபிஐ 5 முறையும், சிபிஎம் 3 முறையும், பாஜக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இக்கல்வியாண்டில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 4 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்க ஜூன்.12ஆம் தேதி இறுதி நாள் என இன்று துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது, சென்னை தாம்பரம் முதல் மங்களூரு இடையே செல்லும் சிறப்பு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் ஜூன்.7 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இயங்கும். தாம்பரத்தில் இருந்து நண்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு கோவை போத்தனூர் வழியாக மங்களூரு சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்- 5,68,200 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் அண்ணாமலை- 4,50,132 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்- 2,36,490 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கலாமணி- 82,657 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.