Coimbatore

News June 12, 2024

கோவை குலுங்கட்டும் – தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்.

image

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அழைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்ற தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கை தீரர்களே திரண்டிடுக ” என்று குறிப்பிட்டுள்ளார்.

News June 12, 2024

கோவையில் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம்.

image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில, மற்றும் துணை அமைப்பாளர்கள் மேற்கொள்ளும் கட்சி பணிகள் தொடர்பாக மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அந்த வகையில் கோவை லீ – மெரிடியன் ஹோட்டலில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. முதலில் நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 12, 2024

ராகுல் காந்திக்கு அறிக்கை விட்ட வானதி சீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது,சொல்லவும் கூடாது. வாக்களிக்கும் தகுதி கொண்ட இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தேர்தலில் போட்டியிடலாம் எந்தப் பதவிக்கும் வரலாம் என்றார்.

News June 12, 2024

அரசு பள்ளிகளில் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று(ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.

News June 12, 2024

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக உறுதிமொழி

image

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் இன்று (ஜுன்12) மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

News June 12, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் வேளியிட்ட அறிக்கை

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை, மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கண்டு தங்களது கிராம வருவாய் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள்

image

கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் பதிவாகியுள்ளன. இதில், பொதுமக்கள் ரூ.53.07 கோடி பணம் இழந்துள்ளனர். ரூ.4.31 கோடி பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

News June 12, 2024

அம்மா ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி

image

கோவை நல்லறம் அறக்கட்டளை பயிற்சி மையத்தில் TNPSC Group II மற்றும் Group IIA தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன இதற்கான மாணவர் சேர்க்கை இன்று (ஜுன்12) நடைபெற்று வருகிறது தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவ மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைந்து, தங்களின் அரசுப்பணி கனவை நனவாக்கிக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News June 12, 2024

கோவை வழியாக இயக்கப்படும் ரயில் சேவை மாற்றம்

image

கோவை சந்திப்பு வரும் 11 ரயில்களின் சேவைகளில் நாளை 13ம் தேதி மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளை கோவை வழியாக இயக்கப்படும் ரயில் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இதே போல கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது.

News June 12, 2024

கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கோவை, சென்னை, மதுரை, புதுவையில் வரும் 17ம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோவையில் (ஜூன் 12) இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!