India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை செட்டிபாளையத்தை சோ்ந்த பெரியசாமி, வரதராஜபுரத்தை சேர்ந்த லோகநாதன், உப்பிலிபாளையத்தை சேர்ந்த சக்தி சரவணா உள்ளிட்ட மூவரிடம் வெள்ளலூரை சேர்ந்த சாந்தி என்பவர் சில மாதங்களுக்கு முன் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.10 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை, பணமும் கொடுக்கவில்லை. இதனையடுத்து மூவரும் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாந்தி நேற்று கைது செய்யப்பட்டார்
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, அம்பேத்கர் கொடுத்த சட்டபுத்தகத்திற்கு முன் தலைகுனிய வைத்துள்ளோம் என்றார்.
40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை; திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள் என்று கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. முப்பெரும் விழாவில் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் தற்போது வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று மாலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று முன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தோ்தலில் வெற்றி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொடிசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் கொடிசியா வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை வெரைட்டிஹால் சாலை அருகே அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் நிர்வாகத்தினர் மாணவிக்கு டிசி கொடுத்துள்ளனர். இந்நிலையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவி பெற்றோருடன் மனு அளித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்ட நிலையில் பள்ளியில் மீண்டும் மாணவி சேர்க்கப்பட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கோவை மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை. இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் குப்பைகளைக் கொண்டு வந்து கோவையை குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது என்றார்.
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பேரூர் பைபாஸ் பகுதியில் உள்ள செந்தூர் காகிதம் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 13) இவர் நிறுவனத்தைத் திறந்தபோது 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் , சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாட பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. சைக்காலஜி பாடப் பிரிவை தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் செலுத்தினர். மொத்தமுள்ள 223 இடங்களுக்கு 206 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 17 காலியிடங்கள் உள்ளன.
Sorry, no posts matched your criteria.