India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நாளை (ஜூன்.18) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துவரி பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் மூலமாக மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என இன்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், கோவையின் பல பகுதிகளில் பாரதியின் பாடலான ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி பெயரில் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி X வலைதளத்தில் கேவலமான பதிவிட்ட திமுக ஐடி விங் சார்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் , தொடர்ச்சியாக இப்படி பதிவிட்டு வரும் திமுக IT wing நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 17 மையங்களில் முதல்நிலை தோ்வு நடைபெற்றது. 7,332 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் காலையில் நடந்த முதல்தாள் தோ்வை 4,411 போ் எழுதினா். 2,921 போ் எழுதவில்லை. பிற்பகல் நடைபெற்ற இரண்டாம் தாளை 7,332 பேரில் 4,386 போ் எழுதினா். 2,946 போ் தோ்வெழுத வரவில்லை.
கோவையில் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா குனியமுத்துார் தனியார் கல்லுாரியில் நேற்று மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சங்க நிறுவன தலைவர் மாயவன் ஓய்வு பெற்ற 77 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, பேசிய அவர் 2026 தேர்தலில் திமுகவை ஆசிரியர்கள் தான் ஆட்சியில் இருந்து இறக்குவர் என்றார்.
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவை மறைமாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் புனித அந்தோணியாா் அருள்தலத்தின் சாா்பில் அலங்கரிக்கப்பட்ட 15 தோ்கள் புலியகுளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தன.
கோவை எஸ்.பி. அலுவலகம் இன்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த மே.1ஆம் தேதி முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 92 நபர்கள் கைது செய்யப்பட்டு 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 174.545 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், கோவையில் வரும் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்ப நிலை குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாகும். ஜூன் 22ம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு, அன்றைய தினம் வெப்ப நிலை 24 டிகிரியில் இருந்து 34 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு என்று இன்று தெரிவித்துள்ளனர்
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கோவை மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மங்களுரில் இருந்து ஜூன்.18, 25, ஜூலை.2 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு – பாட்னா சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவை சென்றடையும். இந்த ரயில் காசர்கோடு, கண்ணூர், போத்தனூர், காட்பாடி, விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.