Coimbatore

News June 24, 2024

கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News June 24, 2024

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை விமான நிலையம் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகவும், சர்வதேச விமான நிலையமாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் சோதனை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

News June 24, 2024

கோவைக்கு ரெண்டே ரெண்டு! சிறப்பு புறக்கணிப்பு

image

சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக்கோரிக்கையில் வெளியிடப்பட்ட 63 அறிவிப்புகளில், சென்னைக்கு 22 திட்டங்களும், கோவைக்கு இரண்டே இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன. . லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றியை வாரி வழங்கியும், கோவை பெருநகரத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அப்பட்டமாகப் புறக்கணித்திருப்பது உறுதியாகியுள்ளது.

News June 23, 2024

நீதிபதி சந்துருவுக்கு இந்து முன்னணி கண்டனம்

image

கோவை இந்து முன்னணியின் சார்பில் இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம், இளைஞர்கள் இணைப்பு விழா ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்கத்தில் இன்று நடந்தது. இதில் அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அப்போது, பேசிய அவர் நீதிபதி சந்துரு கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர். இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பரிந்துரை செய்துள்ள அவரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

News June 23, 2024

வெள்ளலூர் குப்பையை அழிக்க ஒரே ஆண்டு – கமிஷனர் உறுதி

image

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று கூறுகையில் பயோ – சிஎன்ஜி திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பயோ மைனிங் முறையில் ஏழு லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பைகளை அழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எந்திரங்கள் வாயிலாக ஓராண்டுக்குள் குப்பைகள் முழுவதையும் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

News June 23, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

கோவை: பிரமிக்க வைக்கும் டேக்ஸ்பேர் 2024

image

சைமா நடத்தும் டெக்ஸ்பேர் 2024 கண்காட்சியின் 14ஆவது பதிப்பு அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை நிறைவு பெறும், இந்த கண்காட்சியை காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ள ஜவுளி இயந்திரங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன . கண்காட்சியில் இயந்திரங்களை பதிவு செய்வோருக்கு தள்ளுபடி சலுகைகளை அளிக்கின்றன.

News June 23, 2024

சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வரும் – அண்ணாமலை 

image

கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் குறித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மட்டும் தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை விட இரண்டரை மடங்கு டாஸ்மாக் கடைகள் உள்ளன. திமுக தலைவா்களுக்கும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்களுக்கும் இருக்கும் தொடா்பை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளியே வரும் என்றாா்.

News June 23, 2024

கோவை : பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 27 ஆம் தேதி பாலக்காடு – கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். கரூா் – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, திருச்சி- பாலக்காடு பயணிகள் ரயில் திருச்சி – கரூா் இடையே ஜூன் 27ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 22, 2024

வேளாண் பல்கலைக்கழகத்தில் ஊறுகாய் பயிற்சி

image

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இங்கு, மசாலா பொடிகள் தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், ஆகியவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக இன்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!