India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் புதிதாக இயற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை.3 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் ஒருங்கிணைந்த மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன்.23 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன்.25 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன்.26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் (ஜூன்.25)இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகள் விஜயகுமாரி. இவர் நேற்று (ஜுன்.24) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது தந்தை பொதுமக்களுக்காக 43 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். அந்த இடத்தை ஈசா யோகா மையத்தினர் தற்போது ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களை விரட்டி அடித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities’ என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் ஆகிய பகுதிகள் உள்ளது என இன்று ஆட்சியர் கூறினாா்.
கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாயன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் நாளை (ஜூன்.25) வழக்கமாக நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மாநகராட்சி பொது நிதி ரூ.41.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், கவுன்சிலர் செல்வி.நிவேதா சேனாதிபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவில் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி உள்ளனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த இபிஎஸ், ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், இபிஎஸ் மீது கோவை ஜேஎம்.1 நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.