Coimbatore

News June 28, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

News June 28, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை

image

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே தகுதியுள்ளோர் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி அவற்றை பூர்த்தி செய்து தங்களது சான்றிதழ்களின் நகல் மற்றும் புகைப்படத்துடன் ஜூலை 9 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 28, 2024

கோவையில் வாகன நெரிசல் குறித்து ஆலோசனை கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தலைமையில் நேற்று (ஜூன்27) சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எந்த எந்த பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. அவற்றை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News June 27, 2024

கோவையில் வாகன நெரிசல் குறித்து ஆலோசனை கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தலைமையில் இன்று (ஜுன்27) சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எந்த எந்த பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. அவற்றை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News June 27, 2024

துணை வேந்தருக்கு வழங்கபட்ட பதவி

image

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.

News June 27, 2024

கோவையில் கலைஞர் நூலகம் – முதலமைச்சர்

image

மதுரையை தொடர்ந்து கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது என இன்று(ஜூன் 27) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் கோவையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

News June 27, 2024

அனுமதியின்றி பயிற்சி மையங்களை நடத்தினால் நடவடிக்கை

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா பயிற்சி நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 27, 2024

மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

image

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

ஆணையரை சந்தித்த கோவை வீரர்கள்

image

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் சர்வதேச பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வென்றது. இந்திய அணியில் கோவையைச் சேர்ந்த மோகன் குமார், சதீஷ் குமார், நித்யா, ஜெயபிரபா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். சாதித்த வீரர்கள் நேற்று கோவை கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News June 27, 2024

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கோவை உட்பட 12 மாவட்டங்களில் இன்று(ஜூன் 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

error: Content is protected !!