India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நிபா வைரஸ் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மறு அறிவிப்பு வரும் வரை கோவை மாவட்ட எல்லையோர பகுதிகளை சேர்ந்த வாளையார், மாங்கரை உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் நிபா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் தொடரும் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் வெடிபொருள் அவுட்டுக் காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில், கோவையைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், என்னிடம் விமலா கீர்த்தி மற்றும் நான்கு பேர் சேர்ந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னை கருணை கொலை (அ) தற்கொலை செய்ய அனுமதிக்க உத்திரவிட வேண்டும் என்றார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூலை 26-ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் நடைபெறும். கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் 9ம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இன்று கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மேயராக இருந்த கல்பனா, தனது பதவியை கடந்த 3ஆம் தேதி ராஜினாமா செய்தார். பின் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் பதிவு செய்து, கலெக்டர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பட்டது. ஏறக்குறைய 20 நாள்கள் ஆகியும், இன்று வரை மேயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 26ஆம் தேதி துணை மேயர் முன்னிலையில் மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை எம்பி தேர்தலில் தனக்காக பணிபுரிந்த தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், அரசியலில் இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் தோன்றியது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தனித்தன்மை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும் என்றார்.
கோவையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும். காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், திருமலையாம்பாளையம் நேரு கல்லூரியில் டாசா-2024 என்ற நோக்குநிலை திட்டம் தொடக்க நிகழ்ச்சி, கொடிசியா மைதானத்தில் காலை 11 மணிக்கு புத்தக திருவிழா நடைபெறும்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் 2024-25ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.