India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று(ஜூலை 26) முதல் ஜூலை 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோவை கோட்டத்தில், திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவதற்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் 01.08.2024 அன்று 10 மணிக்கு சி.எஸ்.ஜ காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் உயர் சாலை, மயிலாப்பூர் சென்னையில் நடைபெற உள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, குற்ற புலனாய்வு உள்ளிட்ட அனைத்து துறை வீதியிலான விஷயங்களிலும் சிறந்த முறையில் செயல்படும் காவல் நிலையங்களில் மாவட்டத்திற்கு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அவ்வகையில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் விருது வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தொழில்துறை இணை ஆணையர் லீலாவதி என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் தொழிற்சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, தொழில்துறை இணை ஆணையர் லீலாவதி, அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை நடத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், கலைஞர் எழுதிய ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்’ எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு அனுமதியின்றி விநியோகம் செய்ததாக திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கோவை ஜே. எம். 1 நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக நா. கார்த்திக் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
கோவை மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் இன்று(ஜூலை 25) உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், திருமால் மதுரை மாநகராட்சிக்கும், பரமசிவம், ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த வீரன், விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், முருகன் உள்ளிட்டோர் கோவை மாநகராட்சிக்கும் நேற்று புதிய சுகாதார அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை துணை மேயர் வெற்றிசெல்வன் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று(25.07.2024) துவக்கி வைத்தார். இதனையடுத்து ஆணையாளர் கிரிக்கெட் விளையாடினார்.
அரசூர் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில்(ஜூலை 25) சர்வதேச மாணவர்களுக்கு தமிழர்களின் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. ஜிம்பாப்வே, நேபாளம், பங்களாதேஷ், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பம், களரி மற்றும் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.