India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, வால்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு இடிந்ததில், ராஜேஸ்வரி அவரது பேத்தி ஜனனி ப்ரியா ஆகியோர் உயிரிழந்தனர். அதே போல், பொள்ளாச்சியில் கனமழையால் பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் என்பவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களுக்கு மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இன்று இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று இரவு 10 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு இடிந்ததில், ராஜேஸ்வரி அவரது பேத்தி ஜனனி ப்ரியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அமைச்சர் முத்துசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், நிவாரண உதவி வழங்கினார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையால் இன்று மூவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று மிக மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கோவை மாவட்டத்தில் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் எதிரொலியாக வால்பாறை அருகே இன்று நிலச்சரிவு ஏற்பட்டு பாட்டியும், பேத்தியும் உயிரிழந்தனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிகமிக பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வால்பாறையில் 31 செ.மீ., சின்னக்கல்லார், உபாசியில் 24 செ.மீ., சின்கோனாவில் 23 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று வால்பாறை தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள இதய தெய்வம் மாளிகையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிங்கை இராமச்சந்திரன், ஒரே போனில் மோடியுடன் பேசி கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவர முடியும் என்று கூறிய அண்ணாமலை தற்பொழுது எங்கே? என கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் இவ்வாறான அறிக்கைகளை கொடுத்த அண்ணாமலை கோவைக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
கோவை விமான நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது: அக்டோபர் முதல் கோவை சிங்கப்பூர் இடையே புதிய இண்டிகோ சேவை வழங்க உள்ளது. இதற்கான அனுமதியை கோவை விமான நிலையத்திற்கு வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 10ம் தேதி அன்று கோவை அபுதாபி இடையே இண்டிகோ இடையே விமான சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்பட உள்ளது.
கோவை – திருப்பூர் இடையேயான TNPL ப்ளே-ஆஃப் போட்டி இன்றிரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும். ஒரேயொரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்த கோவை அணி திருப்பூரை வீழ்த்துமா? என கமெண்டில் சொல்லுங்க.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே சற்றுமுன் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை, மண் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் வீட்டின் சுவர் இடிந்து பாட்டியும், பேத்தியும் உயிரிழந்தனர். மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இச்சம்பவம் கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.