Coimbatore

News July 31, 2024

கோவை வந்த பேரிடர் மீட்பு குழு

image

கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
எனவே இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகஅரசு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மீட்பு படை இன்று வந்தடைந்தது. கோவையில் ஒரு குழு, நீலகிரியில் ஒரு குழு முகாமிட்டுள்ளது.

News July 31, 2024

102 மனுக்கள் மீது ஒரே நாளில் விசாரணை

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 102 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 79 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 20 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

News July 31, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்ற கலெக்டர்

image

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசக்காபாளையம் ஊராட்சியில் இன்று (ஜூலை.31 ) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமில்
ராசக்காபாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

News July 31, 2024

வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துவரும் வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இட மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் சென்றாலோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்தினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 31, 2024

இறுதிப் போட்டிக்கு சென்றது கோவை

image

TNPLஇல் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திருப்பூர் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை துரத்திய கோவை அணியில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் (123*), முகிலேஷ் (48*) ரன்கள் அடித்தனர். இதையடுத்து 18.5 ஓவரில் இலக்கை எட்டி கோவை அணி அபார வெற்றிபெற்றது. இறுதிப் போட்டி ஆக.4ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

News July 31, 2024

கால்பந்து மைதானத்தை துவக்கி வைத்த அமைச்சர்

image

கோவையில் உள்ள ரத்தினம் கல்வி குழுமம் சார்பில் தொழில் நுட்ப வளாகத்தில் ரத்தினம் கோவை எப்.சி. சார்பில் புதிய கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஈஸ்வரசாமி எம்.பி., துணை மேயர் வெற்றிச்செல்வன் என பலரும் கலந்து கொண்டனர்.

News July 31, 2024

“அனைத்து துறைகளிலும் ஊழல்”

image

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு செய்தியாளரிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசியதில், தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகி உள்ளது என்று தெரிவித்தார்.

News July 31, 2024

பள்ளி மேலாண்மைக் குழு குறித்து ஆய்வு கூட்டம்

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நேற்று 2024-2026 ஆம் ஆண்டிற்கு நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான, கல்வி மற்றும் பிற துறை அலுவலர்களுக்கான முன் திட்டமிடல் கூட்டமானது இன்று ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News July 30, 2024

பள்ளியில் நெல்லிக்கனி திட்டம் துவக்கவிழா

image

பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, எழுச்சியூட்டும் நெல்லிக்கனிதிட்ட துவக்க விழா
கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன் என பலரும் கலந்து கொண்டனர். 

News July 30, 2024

குண்டு எறிதலில் வெற்றி பெற்ற வீராங்கனைக்கு பாராட்டு

image

கடந்த 15ம் தேதியன்று நடந்த தேசிய மாற்றுத்திறனாளிகளின் தடகள போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை ரேஷ்மா ஜானு குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!