India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPL பைனலில் இன்று நடப்பு சாம்பியன் கோவை, திண்டுக்கல் அணியை மோதுகின்றது. இச்சீஸனில் விளையாடிய அனைத்து அணிகளுடன் கோவை வென்றாலும், லீக் சுற்றில் திண்டுக்கலுக்கு எதிராக மட்டும் தோல்வியடைந்தது. கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான், திண்டுக்கல் அணியில் கேப்டன் அஷ்வின் முக்கிய பங்காற்றி வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், யார் கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்திற்கு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வந்திருந்தார். அவரை கோவை மாவட்டம் விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் சால்வை அணிவித்து வரவேற்றாா். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
கோவை வஉசி திடலில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கான ஆயத்த பணிகளை எம்.பி கணபதி ராஜ்குமார் நேரில் (ஆகஸ்ட்.3) ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் அசோசியேசன் (ம) கோவை மாநகராட்சி இணைந்து நடத்த உள்ள தேசிய அளவிலான INDIA SKATE GAMES 2024 போட்டிக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயக்குமார் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக, அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். “தேசிய கட்சியின் மாநில தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை யார் உயிருக்கும் உத்தரவாதமில்லை. அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆனால், காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் நேற்று வழக்கறிஞரை வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்துள்ளனர். ‘வழக்கறிஞரை ஏன் வெட்டி கொலை செய்தீர்கள்?’ என சரணடைந்த நபர்களிடம் கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூலிப்படையாக செயல்பட்டார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2-வது நாளாக இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10-வது தேர்ச்சி அல்லது 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவைக்கு இன்று வருகை தந்த திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி புத்தகம் வழங்கி வரவேற்றார்
கோவை மாவட்டத்தில் நாளை ஆடி18-யை முன்னிட்டு பொதுமக்கள் நமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் குடுப்பது வழக்கம். இதற்காக கோவை மாநகரில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். நீர், நிலைகளில் அதிக அளவு நீர் வரத்து உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.