India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 9ஆம் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் கோவை, கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இதற்கான பணிகள் விரைந்து நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!
கோவை அம்மன் குளம் சேர்ந்தவர் ஆல்வின் கிளிண்டன்(30) இவர் நேற்று கிருஷ்ணசாமி நகர் தனியார் மருத்துவமனை அருகே உள்ள டீக்கடையின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஆல்வின் கிளிண்டனை கத்தி காட்டி மிரட்டி ஒரு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஷாரூக்கான (22) என்பவரை கைதுசெய்தனர்.
கோவை மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பெண் கவுன்சிலர் மீனா லோகு கண்ணீர் விட்ட சம்பவம் நடந்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் முடிந்த நிலையில், கண்ணீருடன் காரில் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. கோவை மேயர் பதவியிலிருந்து கல்பனா ராஜினாமா செய்த நிலையில், திமுக சார்பில் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருந்துவந்ததார். உடல்நிலை சரியில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் வேட்பாளராக 29வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றால் கோவையின் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நாளை கோவை மாநகர மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி (29வது வார்டு கவுன்சிலர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.
மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன், டிரைவிங் ஸ்கூல் மேனேஜர். இவரது மனைவி கங்காதேவி, மகன் சஷ்வந்த் (7). தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வந்தார் சஷ்வந்த். விடுமுறை தினமான நேற்றிரவு சஷ்வந்த் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.