Coimbatore

News August 7, 2024

கோயம்புத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்புத்தூரில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூரில் 5செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.

News August 7, 2024

ஆட்கொல்லி அமீபா: கோவையில் அலர்ட்!

image

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் கடந்த 3 மாதங்களில் 4 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்; இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் இந்த அமீபா தொற்றால் தமிழக கேரளா எல்லை பகுதிகளான காரமடை அடுத்த கோப்பனாரி, முள்ளி பகுதிகளில் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 7, 2024

கோவையில் இன்றே கடைசி நாள்

image

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 21 முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 557 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம். முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

கோவையில் இன்றைய முக்கிய செய்திகள்

image

➤கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். ➤மேயர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகன், அமைச்சர் கே.என்.நேருவிடம் மேயர் பதவி தரப்பாடாதது குறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பியது சலசலப்பை எழுப்பியது. ➤சூலூர் விமான படை தளத்தில் கூட்டு போர் பயிற்சி இன்று தொடங்கியது. ➤பாரதியார் பல்கலை., செப்.8ஆம் தேதி சிறப்பு அரியர் தேர்வு.

News August 6, 2024

பாரதியார் பல்கலையில் சிறப்பு அரியர் தேர்வு

image

பாரதியார் பல்கலை., கீழ் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்.8ஆம் தேதி சிறப்பு அரியர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் ஆண்டில் எம்.எஸ்.சி., சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், 21-22ல் இளநிலை மாணவர்களுக்கும், 22-23 முதுநிலை மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடரும் வகையில் தேர்வு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://b-u.ac.in/ என்ற இணையத்தில் பார்க்கலாம்.

News August 6, 2024

கோவையில் வட்டமிடும் பண்ணாட்டு போர் விமானங்கள்

image

கோவை, சூலூர் விமானப்படைத்தளத்தில் “தரங் சத்தி 2024” விமான படையின் பன்னாட்டு கூட்டு வான் பயிற்சி இன்று துவங்கி ஆக.14 வரை நடைபெறவுள்ளது. இது தமிழகத்தில் நடக்கும் முதல் பன்னாட்டு வான் பயிற்சியாகும். இந்த கூட்டு பயிற்சியில் ஜெர்மன், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், 10 நாடுகள் போர் விமானங்களுடன் இன்று பயிற்சிக்கு வருகை புரிந்துள்ளது.

News August 6, 2024

BREAKING கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு

image

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த கோவை மேயர் தேர்தலில் 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. யாரும் போட்டியிடாத நிலையில் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களே உங்கள் கருத்து என்ன?

News August 6, 2024

BREAKING கோவை மேயர் தேர்தல் தொடங்கியது

image

கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது. இந்த நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் சற்றுமுன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 கவுன்சிலர்களை கொண்ட கோவை மாநகரில் 96% இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளனர். திமுக சார்பில் ரங்கநாயகி வேட்பாளராக களத்தில் உள்ளார். 4% உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். உங்கள் கருத்து என்ன?

News August 6, 2024

கோவையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

image

கோவை மாவட்டம் காளாம்பாளையத்தில் கடந்த 3ம் தேதி சாலை விபத்தில், சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது தாய் தந்தையர் ஸ்ரீ ராமின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் இன்று தானமாக வழங்கினர். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் உடல் நாளை காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

News August 6, 2024

கோவையில் இன்று மின்தடை

image

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் முழு நேர மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!