India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மண்டல வைப்புநிதி கமிஷனர் வைபவ் சிங் இன்று விடுத்த அறிக்கையில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி பிஎப் சந்தாதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கோவையில் ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரியிலும், நீலகிரி எல்லனகள்ளி நீடில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும், திருப்பூர் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள ஜியூஎஸ் ஆடை நிறுவனத்திலும் நடைபெற உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூலூர் விமானப்படை தளத்தில் சரக்கு கையாளும் பணிக்கு 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ள ஆண்களுக்கு மாதம் ரூ.15000/- சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 9443301432 என்ற எண்ணில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி “கோவையில் 1542 ரேஷன் கடைகள் இருப்பதாகவும், 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்று 750 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று 1500 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மேயர் ரங்கநாயகி ஆகியோர் இருந்தனர்.
அதிமுக மாநில விவசாய அணி துணைத்தலைவர் (ஆகஸ்ட். 25) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் டியூகாஸ் கூட்டுறவு நிறுவன தலைவரும், அதிமுக மாநில விவசாய அணி துணை தலைவருமான சுப்பையன் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் ஊர்க் நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
கோட்டூர் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் மல்லிகா சக்திவேல், இன்று காலமானார். அவரின் உடலுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, கோட்டூர் பேரூராட்சி செயலாளர் பால்ராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவையை மையமாக கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, எஸ்பி பத்ரிநாராயணன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரது தலைமையில் ஒரு துணை சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர் உட்பட, 40 போலீசார் பணியாற்றி வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அதிகாரியின் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள காலி நிலத்தில், சில ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையை மையமாக கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, எஸ்பி பத்ரிநாராயணன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரது தலைமையில் ஒரு துணை சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர் உட்பட, 40 போலீசார் பணியாற்றி வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அதிகாரியின் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள காலி நிலத்தில், சில ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் டிரோன்கோ மூலமாக வார்டு வாரியாக அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டு, சொத்து வரி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஏராளமான ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டு புது கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், சொத்து வரியை மாற்றியமைக்கவில்லை. முதல்கட்டமாக ரூ.100 சொத்து வரி செலுத்தும் வரி விதிப்புதாரர்கள் கட்டடம் எவை என பில் கலெக்டர்கள் மூலம் கள ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.