India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று (மார்ச்.18) இந்திய நாட்டின் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்த்து மோடி ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிய இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மிரட்டல் விடுத்த மர்மநபர் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, பள்ளியில் போலீசார் குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் “ரோடு ஷோ” நடத்த உள்ள நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி, கோவை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் சிபிஐஎம் போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக போட்டியிடுகிறது. பொள்ளாச்சி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கே.ஷாமுகசுந்தரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் இன்று பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று கூறினார். மேலும் அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.
சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த பெருந்தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டது. மேலும் பல்வேறு மேம்பாலங்களில் வரையப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை கோவை முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.