India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பூலுவப்பட்டி அடுத்த மோளப்பாளையம் பகுதியில், இரும்பு காலத்துக்கு முந்தைய புதிய கற்கால மக்களின் வாழ்ந்த வாழ்விடமாக இருந்தது அகழாய்வில் இன்று தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் இந்த அகழாய்வு செய்யப்பட்டது. இதில், தொல்லியல் அகழாய்வுகளில் கி.மு. 1600-1400 ஆண்டுகளுக்கு இடையே வாழ்ந்த புதிய கற்கால சான்றுகள் வெளிப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நாளை (30.08.2024) காலை 9.15 மணிக்கு கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோவை வருகை தர உள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கொடிசியா அரங்கத்தில் இன்று கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக். ஆட்சி தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகின்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இன்று கூறியதாவது:
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இணைந்து பணியாற்ற துணை சட்ட உதவி வழக்கறிஞர்கள் இருவர், அலுவலகப் உதவியாளர்கள் இருவர் தேவைப்படுகின்றனர். தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.
பாலக்காடு மலம்புழா மந்தக்காடு பகுதியை சேர்ந்தவர் அபூபக்கர். ஓய்வுபெற்ற எஸ்ஐயான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பாலக்காடு நகரை நோக்கி டூவீலரில் சென்றார். அப்போது, கோவை-கோழிக்கோடு பைபாஸ் ரோட்டில் பாலால் சந்திப்பில் டூவீலர் மீது டேங்கர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து பாலக்காடு ஜிஎச்சில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாலக்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக அரசின் அண்ணா விருது பெற்ற சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் அழகுராஜ், செட்டிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி பாண்டியன், பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் குப்புராஜ், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பணியாற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயனிடம், வாழ்த்துகளை பெற்றனர்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக கோவை – சென்னை ரயில் செப்.1 ஆம் தேதி கோவை – காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். காட்பாடி – சென்னை இடையே இயக்கப்படாது. இதேபோல, சென்னை – கோவை ரயில் காட்பாடி – கோவை இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை – காட்பாடி இடையே இயக்கப்படாது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், நாளை காலை 9.30 மணிக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில், நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று தீர்வளிப்பர் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது, சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நாளை (29.08.2024) கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். நிகழ்ச்சிகள் காலை 10 மணியளவில், கொடிசியா கூட்டரங்கில், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கும் விழாவில் கலந்து கொள்கின்றார் என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று அனைத்து கல்லூரிகளுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் நடத்தையில் சிறிதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.