India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, சின்ன தடாகம் பகுதியில் இன்று அதிகாலையில் வடவள்ளிக்காரர் என்ற சண்முகம் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேலியை சேதப்படுத்தி, ஒற்றை காட்டு யானை அவர்கள் குடியிருக்கும் வீட்டின் மேற்கூரைகளை சேதப்படுத்தியது. மேலும், அவர்கள் வீட்டில் மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தூக்கி வீசி சூறையாடியது. இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அச்சத்தில் உள்ளனர்.
➤கோவை, ஆனைமலையில் 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ➤தாமரைக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர். ➤கோவை வந்த ஜேபி நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு. ➤பன்னாட்டு விமான நிலையில் பணி ஓய்வு பெற்ற ஊழியருக்கு ரூபாய் நோட்டுகளால் மலை அணிவித்து, பரிசு வழங்கினர். ➤வால்பாறை பகுதியில் மாலை நேரத்தில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது.
நீலகிரி எம்பி-யும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இன்று காரமடை மேற்கு ஒன்றிய பகுதிகளில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அதற்காக இன்று அவர் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தார். கோவை விமான நிலையம் வந்த அவரை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சால்வை அணிவித்து வரவேற்றார்.
கோவை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். விருப்பமுடையோர் தங்களது பெயர், முகவரியுடன் செப்.30-க்குள் மாவட்ட நுாலக அலுவலர், 1232 பெரிய கடை வீதி, கோவை-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கோவை ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனைமலை தாத்தூரை சேர்ந்த தம்பதி அருண்குமார் – சுகன்யா. இவர்களது குழந்தைகள் தனுஸ்ரீ, அகிலன். தம்பதி அங்குள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தனர் . சுகன்யா நகர பகுதிக்கு சென்று வசிக்கலாம் என கூறிவந்தார். அதற்கு கணவன் மறுத்ததால் வேதனையடைந்த சுகன்யா நேற்று அருகில் உள்ள கிணற்றில் 2 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையை சேர்ந்த பலரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பல கோடி ரூபாயை பறித்திருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் கடந்த ஜன. முதல் ஆக. 26ம் தேதி வரை சுமார், ரூ.73 கோடி ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கோவை மண்டல அளவில் 78 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சிலர் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. காலை நேரத்தில், இரவு 10 மணிக்கு பிறகு மதுபான கடை மூடிய பின்னர் மது பிரியர்களுக்கு மதுபானங்களை பதுக்கி சிலர் தினமும் விற்பதாக தெரிகிறது. கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபானம் பதுக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில், விற்பனை விவரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) சனிக்கிழமை பணி நாளன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முழுமையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஆட்சியர் இன்று கூறியதாவது..
நாளை (31.08.2024) காலை 6.15 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கம் அருகில், சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தான கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 5 கி.மீ நெடுந்தொடர் ஓட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் தலைமையில் ஐஜி செந்தில் குமார் மற்றும் டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷே குப்தா மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.