Coimbatore

News August 14, 2024

ஆட்சியரின் சமூக வலை தளத்தில் நேரலை

image

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா மாவட்டஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, தேசியக் கொடியினை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டியிலிருந்து கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் சமூக ஊடக கணக்குகளான முகநூல் ஆகியவைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

கோவையில் நாளை பார்களை மூட உத்தரவு

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி நேற்று கூறுகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) சுதந்திர தினத்தையொட்டி கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார். விதிகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News August 14, 2024

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா 

image

கோவை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், முனைவருமான வெ.கீதாலட்சுமி தேசியக் கொடியேற்றி, சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றி உள்ளார். இதுகுறித்து தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

கோவை ரயில்நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போத்தனூர் வழியாக இயங்கும். வருகின்ற 14ம் தேதி மற்றும் 21ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் என்று இன்று தெரிவித்தனர். 

News August 14, 2024

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

image

கோவை மணி உயர்நிலைப்பள்ளியில் 1974ம் ஆண்டு இறுதி ஆண்டு முடித்த மாணவர்களின் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களை, தற்போதைய சாரண இயக்க மாணவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, தங்கள் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவர்கள், தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். முன்னாள் மாணவர்கள், தங்கள் வகுப்பு வாரியாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

News August 13, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பொள்ளாச்சியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ➤வால்பாறை பகுதியில் இரவில் யானை உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ➤சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி 3 நாள்கள் நடைபெறுகிறது. வரும் 15ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி. ➤பாப்பம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து லாரி மீது மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் கயாம் அடைந்தனர்.

News August 13, 2024

கல்லூரி பேருந்து விபத்து: மாணவர்கள் படுகாயம்

image

பாப்பம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றி சென்று கொண்டு இருந்த போது இன்று கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News August 13, 2024

கோவையில் ரூ.1 லட்சம் பரிசு: கலெக்டர் அழைப்பு

image

கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி வரும் செப் (ம) அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் விளையாட்டு நடத்தப்படவுள்ளது; இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வென்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.75,000, 3 வது பரிசு ரூ.50,000. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

கோவையில் ஆரஞ்ச் அலர்ட்

image

கோவை மாவட்டத்திற்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!

News August 13, 2024

பொள்ளாச்சியில் இன்று கடை அடைப்பு

image

வணிக வளாகங்கள் மற்றும் வணிகர்களின் துயரை தீர்க்க இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பொள்ளாச்சியில் நகராட்சி கட்டிட விதிமீறல்கள் எனக் கூறி மகாலிங்கபுரத்தில் உள்ள வணிக வளாகங்கள் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று (13.8.24) கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!