India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில், புதிய மருத்துவமுறையான ‘சிஏஆர்டி தெரபி’ சிகிச்சை முறையை அறிமுகம் செய்து கேஎம்சிஹெச் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த சிஏஆர்டி சிகிச்சையை, 3 முறை செய்து தமிழகத்திலேயே அதிக முறை செய்த மருத்துவமனையாக பெயர் பெற்றுள்ளது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று அன்னூர், மூக்கனூர், கரியாக்கவுண்டனூர், காட்டம்பட்டி, குன்னத்தூர், பொன்னேகவுண்டன்புதூர் உள்ளிட்ட 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. கணபதி ஹோமம், கோ மாதா பூஜை, திருவிளக்கு வழிபாடு என பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி களைகட்டியுள்ளது.
கோவை நகரில் போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆம்புலன்ஸ் சேவைகளின் சராசரி நேரம் 11.57 நிமிடங்களிலிருந்து 7.10 நிமிடங்களாக குறைந்துள்ளது. யு-டர்ன்கள் மற்றும் வட்ட சந்திப்புகள் போன்ற மாற்றங்களை நகர காவல்துறை அறிமுகப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக என காவல்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்று சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டத்தில் 17 குளங்கள் தேர்வு செய்யபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒதுக்கீடு செய்ய பட்டுள்ள குளங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்றார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாவட்ட வன அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று கோவை மண்டல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் யானை பாதுகாவலர், யானைகள் மற்றும் கோயில் உரிமையாளர்கள், தனியார் யானை உரிமையாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. இதில் கள இயக்குநர்கள் கலந்து கொண்டு யானைகளை கையாளுவது எப்படி, அதற்கு எவ்வாறான உணவுகளை வழங்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர்.
வரும் செப்.11ஆம் தேதி அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடக்கிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 12ஆம் தேதி ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடக்கிறது. இதில் 1500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குகிறார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், துடியலூர் பாலிடெக்னிக் கோவை மகளிர் பாலிடெக்னிக் ஆனைகட்டி பழங்குடியினர் பாலிடெக்னிக் வால்பாறை பாலிடெக்னிக் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 0422 – 2642041, 88254- 34331, 80727 – 37402 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து செப்.6 நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் மட்கான் – வேளாங்கண்ணி ரயில் செப்.7 நண்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுநாள் மறுமார்க்கமாக மட்கான் புறப்பட்டு செல்லும். இந்த ரயில் நாகை, கோவை, தலச்சேரி கண்ணூர், உடுப்பி வழியாக இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், பொது இடங்களில் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 9ஆம் தேதி அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். இதனை முன்னிட்டு கோவை மாநகரில் 1500 போலீசார், புறநகரில் 1000 போலீசார் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு நேற்று மாணவியர் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி, வேட்டி சட்டை அணிந்து, வளையல், மஞ்சள், கும்பம், வாழைத்தார் உள்ளிட்ட சீர்வரிசையுடன் வரிசைகட்டி நின்று, பள்ளி முதல்வர் கரோலின் விக்டோரியா மற்றும் ஆசிரியர்களை வளாகத்தில் இருந்து வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு காண்போரை நெகிழச்செய்தது.
Sorry, no posts matched your criteria.