India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை – ஜபல்பூர் சிறப்பு வாராந்திர ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “கோவை – ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (50). தங்க நகை மொத்த வியாபாரி. இவரிடம் செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த செந்தில் முருகன் (42), ராஜி ஆகியோர் வங்கியில் ஏலம் போகும் நகைகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.,8 ஆம் தேதி நகை வாங்குவதற்காக சுரேஷ் வழங்கிய ரூ. 31 லட்சத்தை இருவரும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் உசைன் ஷெரீப்(40), செல்போன் வியாபாரி. இவரிடம், கடந்த 2024-இல் கோவை காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ரகுமான் சுமார் 436 செல்போன்களை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியுள்ளார். பின் நேற்று உசைன் ஷெரீப் கோவை வந்து ரகுமானிடம் பணத்தை கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறையினரால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 28 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது 9498181212 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் காவல்துறை தரப்பில் இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 20 நாட்களுக்கு, 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும், கோவையில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் தேவையான நீர் உட்கொள்ள வேண்டும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஏப்.,9 ஆம் தேதி பெரம்பலூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பேச உள்ளதாக கோவை பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மதினா நகர் அருகே, ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார், இளங்கோவன் உள்ளிட்டோர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சதீஷ்குமார் மது பாட்டிலை உடைத்து அப்பகுதியில் வீசியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ், அசாருதீன், அன்வாஸ் முகைதீன், அபிபூர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டு இருவரையும் தாக்கியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.
கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.12 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, புலியகுளம் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024ல் வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.1)நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.