India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆல்வின் இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். இந்த நிலையில் போலிசார் இன்று இவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கியிருந்த ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆல்வின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைக் காவலர் ராஜ்குமார் மீது ஆல்வின் கத்தியால் குத்தியதால், தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆல்வினின் 2 கால் முட்டிகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது..
கோவை மாவட்டத்தில் பிற்படுத்த பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பித்தளை இஸ்திரி பெட்டிகள் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு தகுதியானவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சலவை தொழிலில் ஈடுபவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 11 கல்லுாரிகளில், 34 துறைகளில் முதுகலை படிப்பு, 29 துறைகளில், பி.எச்டி., படிப்பும் வழங்கப்படுகிறது.வரும், 2024 – 25 கல்வியாண்டுக்கான முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை, 16ம் தேதி துவங்கியது. தகுதியான மாணவர்கள், https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் வீட்டின் வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை கடித்துக்கொண்டு வந்து, படுக்கை அறையில் வளர்ப்பு பூனை போட்டது. அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் சாந்தியை பாம்பு தீண்டியது. இதையடுத்து அலறிய சாந்தியை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து நடத்தும் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு 7 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் வந்தனர். அப்போது அலுவலக கதவை மூடி ஊழியர்கள் யாரையும் வெளியே செல்லவிடாமல், சோதனை மேற்கொண்டனர். அதன்படி அலுவலக ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள், பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனையில் புரோக்கரிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்தனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள, சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று திடீரென உள்நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அங்கு திடிரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் யார்? இடை தரகர்கள் யார்? யார் மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெறுகின்றது என சோதனை நடத்தி வருகின்றதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வருகை தந்த, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வரவேற்று மகிழ்ந்தார். உடன் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மலையிடப் பகுதியில் 2016 அக்.20ஆம் தேதி அல்லது அதற்கு முன் பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனை பிரிவில் அமையும் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.