Coimbatore

News May 1, 2024

கோவை மக்களுக்காக ஊட்டியில் இருந்து தண்ணீர்

image

கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணைகளில் உள்ள சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் உள்ள நீரளவு குறைந்த அளவில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போர்த்திமந்து அணையில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 20 கோடி லிட்டர் குடிநீரை பெற கோவை மாநகராட்சி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது கிடைக்கும் என்று இன்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.

News May 1, 2024

கோவை: கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா என ஆய்வு

image

கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என அங்கிருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.

News May 1, 2024

வீட்டுக் கடனை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த உத்தரவு.

image

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த செல்வராஜின் மகன் சுஜேஷ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடன் அவர் பெற்ற வீட்டுக்கடன் நிலுவைத்தொகையினை செலுத்த கோரியுள்ளார். அதனை நிறுவனம் மறுக்கவே கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார். இதை விசாரித்த தலைவர் தங்கவேல் கடன் நிலுவை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.

News May 1, 2024

சிறுவர்களுக்கு இலவச கலை பயிற்சி

image

கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை அரசு இசை கல்லூரியில் செயல்படும் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 10 ஆம் தேதி வரை காலை 10 முதல் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் தொடா்பான பயிற்சிகள் இன்று முதல் அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97515 – 28188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

பாலத்தில் தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்

image

ஆனைமலை காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் பிரிவு வழியாக, வெப்பரை , காக்கா கொத்திபாறை ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனம், சரக்கு ஆட்டோக்களில் சென்று வருகின்றனர்.
இப்பாதையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, இந்த பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துள்ளனர்

News May 1, 2024

கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

image

காரமடை, சென்னிவீரம் பாளையத்தில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமோனியா கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வடக்கு ஆர். டி.ஓ.கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் ஆகியோர் அமோனியா காஸ் கசிந்த இடத்தில் ஆய்வு செய்த பின் சுமார் 300 கிலோ, அமோனியா காஸ் வேறு ஒரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது

News May 1, 2024

நீர் மோர் வழங்கிய மாநகராட்சி ஆணையர்

image

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த வெயில் காலத்தில் பயனடையும் விதமாக மாநகரின் 5 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் மொத்தம் 100 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. இதை தவிர நீர் மோர் பந்தல்களும் துவங்கப்பட்டுள்ளது. இன்று நீர் மோரை ஆணையர் வழங்கினார்.

News April 30, 2024

கோவை: 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சி

image

கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த ஆண்டு அரசு பொருட்காட்சியானது கோவை மாநகராட்சி, வ.உசி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு, 45நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

News April 30, 2024

அம்மோனியா வாயு கசிந்த இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு

image

கோவை, காரமடை ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி சென்னி வீரம்பாளையத்தில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் அம்மோனியா வாயு கசிவினால் நேற்று விபத்து ஏற்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டு மேலும் அவ்வூரில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார்.

News April 30, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.