India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் விதி மீறல்கள் கண்காணிக்கப்படும். மாநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கோவையில் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் வருவாய் துறை, வனத்துறை, போலீசார் இணைந்து இரவு நேரங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக பொதுமக்கள் 95660 38186 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 16 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 51 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் பூபதி (35) என்பவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 2000 பணத்தை பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஜெர்மன் ராகேஷ்
(24) என்பவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லும்போது எல்லப்பாளையம் அருகே தவறி விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது.
பல்வேறு நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி திமுகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியை வரவேற்க்கும் வகையில் இரயில் நிலையத்தில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது அவர் கூறுகையில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்திதான், அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.
கோவை, விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உள்ளார்.
கோவை புலியகுளத்தில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பங்கேற்றார். அப்போது பேசுகையில் சட்டம்-ஒழுங்கு சரியில்லாத நிலையில் என்கவுன்ட்டா் மூலம் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என தமிழக அரசு நினைக்கிறது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்குத்தான் ஏமாற்றம் இருக்கும் என பேசினார்.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், கோவை மேட்டுப்பாளையத்தில் தையல்பள்ளியில் மகளிருக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89404-87600, 70129-55419 என்ற மொபைல் எண்ணில், தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.