India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. கோவை மாவட்டத்தில் இயற்கை சீற்றங்கள் குறித்த புகார் களுக்கு 0422-2302323 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைத்து தகவல் தரலாம். அவ்வாறு தெரிவிக்கும் பொதுமக்களுக்கு தேவயான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்க படும் என்றார்.
சிறுமுகை முத்துசாமி திருமண மண்டபத்தில் நாளை (அக்.9) காலை 10 முதல் மாலை 2 மணி வரை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் – கோவை வழியாக செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு-க்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (08.10.2024) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் மேயர்.ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கினர்.
கோவையைச் சேர்ந்த மாணவி பிரவீனா (10). இவர் CM ஸ்டாலினுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அன்மையில் நான் திரைப்படம் பார்க்க சென்றேன். படத்திற்கு முன் “புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் (ம) உயிரை கொள்ளும்” என இருந்தது. இதில் கொல்லும் என்பதற்கு கொள்ளும் என எழுத்துபிழை உள்ளது. பொதுஅறிவிப்புகளில் தவறு இல்லாமல் இருக்க வேண்டும் என எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கோவை, மாவட்டம் மேட்டுப்பாளையம், சாலை, தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தசரதன் பள்ளி மற்றும் ஆர்.எஸ் புரம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பாரதி வித்யா பவன் ஆகிய பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் வெடிகுண்டுகள் உள்ளதா என சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் இல்லாத நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த, மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க, இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேக்கம்பட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் திமுக மூத்த முன்னோடி வெள்ளையன் இல்லத்திற்கு
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நேரில் சென்று அவரது உடல் நலம் விசாரித்து நிதி உதவி வழங்கினார். உடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, பா.அருண்குமார் Ex MLA, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் T.R.சண்முகசுந்தரம்,
வழக்கறிஞர் அ.அஷ்ரப் அலி கலந்துகொண்டனர்.
கோவையில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கியது. அரசு மருத்துவமனையின் உள்ளே சாக்கடைநீர் கலந்த மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால், ரயிலை பிடிக்கச் சென்ற பயணிகள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர் மற்றும் ‘ஸ்கோரர்’ தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.இதில், பங்கேற்க விரும்புவோர், நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்படும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.