India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், அக்.10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு புறப்படும் சென்னை சென்ட்ரல் – கோட்டயம் சிறப்பு ரயில் மறுநாள் கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக அக்.11, 13 ஆம் தேதிகளில் இந்த ரயில் கோட்டயத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காணாமல் போன 3 மாணவிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் இருந்து மாயமான மூன்று மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகளை மீட்க தனிப்படையினர் சென்னை செல்ல உள்ளனர்.
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை அலுவலக நேரங்களில் கிடைக்கும்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வரும் 10ந்தேதி மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் வடவள்ளி சக்தி காமாட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் நடைபெற உள்ளது. இம்முகாமில் பாதாள சாக்கடை இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு, பட்டா பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது. ஆகவே விருப்பமுள்ள கோவை பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வருகின்ற அக்-10 முதல் கோவை காந்திபுரம் சி-1காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர், முறையற்ற வகையில் பயணிப்போர், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10,00,82,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு அடுத்த 2 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த 2 தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்ததால், புறநகர் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
கோவை மாநகர பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை பாதிப்பு குறித்து புகாரளிக்க மாநகராட்சி நிர்வாகம் அவசர கால உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மைய எண்: 0422-230 2323 வாட்ஸ் அப் எண்: 81900 00200 வடக்கு மண்டலம் – 89259 75980 மேற்கு மண்டலம் – 89259 75981 மத்திய மண்டலம் – 89259 75982 தெற்கு மண்டலம் – 90430 66114 கிழக்கு மண்டலம் – 89258 40945 என்ற எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுல்தான்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக சிவகாமி,பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜா செல்வம், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பணியிட மாறுதல் தொடர்பாக எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்க விடுமுறை எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த ராஜா@ஜூனியர் ராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவின் குனியமுத்தூர் வார்டு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் டூவீலரில் சென்ற போது எதிரே டூவீலரில் வந்த இருவர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோபிநாத், பூமீஸ்வரன் உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.