India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரதட்சணை கொடுமை வழக்கில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசால், ஓராண்டாக தேடப்பட்டு வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (30). என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து துபாய்க்கு, விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது, குடியுரிமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா இன்று கூறியதாவது, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் துவங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் deancmchcbe@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றார்.
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி துறை சாா்பாக தமிழுக்கு சேவையாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தமிழறிஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்தது. இதனால், இப்பகுதி குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழையால், அப்பகுதியில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டங்களை நடத்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை (அக்.2) காலை 11 மணிக்கு கிணத்துக்கடவு ஒன்றியம் வடபுதூர் ஊராட்சியில் நடைபெறும்
கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமுக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் எம்.கணேசன் முன்னிலை வகித்தார். நகராட்சியின் பல்வேறு பிரிவு நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமுக்கு வந்த மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கோவை மாவட்ட ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நாளை (02.10.2024) தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் செயல்படும் இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை நெக்ஸ்ட் அமைப்பின் தலைவா் சதீஷ் கூறுகையில், தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையமான கோவையிலிருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆா் விமானத்துடன் அக்.1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவை தொடங்குகிறது. அக்.27ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது என்றார்.
கோவை மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் நேற்று கூறியதாவது. கோவை மாநகராட்சியுடன், மதுக்கரை நகராட்சியை இணைப்பதாகவும், இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளளூர் ஆகிய பகுதிகளை, 4 பேருராட்சிகளாகவும், குருடம் பாளையம், சோமையம் பாளையம், பேரூர் செட்டிப்பாளையம், கீரணத்தம், நீலாம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.