India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 53 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சிங்காநல்லூர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. 2017ல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்தனர். இந்த வருடத்தில் டெங்கு இறப்பு என்பது ஆறு பேர் தான். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவையில் பூஜை பொருள் கடை நடத்திவரும் தமிழ்பாண்டியனுக்கு வீரகேரளத்தை சேர்ந்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியதையடுத்து ரூ.21.50 லட்சம் முதலீடு செய்தார். இதேபோல் பலரும் ரூ.1.02 கோடி முதலீடு செய்தனர். பணம் திரும்ப கிடைக்கவில்லை. புகாரின்பேரில் விஜயகுமார் மனைவி பிரியதர்ஷினியை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்துக்குட்பட்ட கடைகள் மற்றம் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அக்.2ல் காந்தி ஜெயந்தி விடுமுறை அன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட 164 நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப, அதிகபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கோவை, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 கடனுதவி பெற்று முறையாக திரும்ப கட்டி முடித்தவர்கள் அடுத்த தவணை 20,000 கடன் பெறவும் மற்றும் 20,000 கடனுதவி பெற்று முறையாக திரும்ப கட்டி முடித்தவர்கள் அடுத்த தவணை 50,000 கடன் பெறவும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறும். முகாமில் கலந்து பயனடையலாம்.
கோவை எஸ்பி அலுவலகம் இன்று மாலை விடுத்த செய்தி குறிப்பில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம். புகாரளிக்க 94981 81212, 77081 00100 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து வட்டாரங்களில் வசிப்போர் அதிகளவில் பங்கேற்கும் பொருட்டு, கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05.10.2024 அன்று காலை 9.00 முதல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும், எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத இளைஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை பெற https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பம் வழங்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (அக்.02) விடுத்துள்ள செய்திக் குறிப்பில், குரூப் 2 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும், விவரங்களுக்கு studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 93615-76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.