Coimbatore

News October 7, 2024

அனுமதியின்றி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை

image

கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் கோவை டிஆர்ஓ – விடம் உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

அனுமதியின்றி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை

image

கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் கோவை டிஆர்ஓ – விடம் உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

முதல்வர் கோப்பை: கோவை முதலிடம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கடந்த அக்.4ஆம் தேதி தொடங்கிய மாநில போட்டிகள் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பதக்கப்பட்டியலில் கோவை மாவட்டம் 1 தங்கம், 2 வெள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. திருச்சி, தேனி இரண்டு, மூன்றாம் இடங்களில் உள்ளன.

News October 6, 2024

கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

image

அக்.11 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, நாகர்கோவில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 140 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 6, 2024

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கோவை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயர்களை பதிவு செய்ய 31.12.2024 தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 6, 2024

பட்டாசு கடை வைக்க உடனே விண்ணப்பிக்கவும்

image

கோவை மாவட்டத்தில் வரும் 31.10.2024 அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவு செய்ததற்கான நகல் பெறவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று தெரிவித்துள்ளார்

News October 5, 2024

பில்லூர் மூன்றாம் திட்டத்தில் பராமரிப்பு பணி

image

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் 09.10.2024 அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய தினங்களில் குடிநீர் விநியோகம் தடை ஏற்படும். இதன் காரணமாக துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்றனர்.

News October 5, 2024

கோவை: மருமகனுக்கு 10 ஆண்டு சிறை

image

கோவை ரத்தினபுரியை சேர்ந்த தேவராஜ் சொத்து தகராறு காரணமாக 2021ஆம் ஆண்டு தனது மாமனார் கருப்பசாமியை தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தேவராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு கோவை எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீா்ப்பளித்தாா்.

News October 5, 2024

கோவையில் போலி ரேஷன் கார்டுகளா?

image

கோவை மத்வராயபுரம் நியாயவிலைக்கடையில் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கி வருவதாகவும், அப்பகுதியில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகார் தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் உண்மை இல்லை என கண்டறிந்துள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு என்பது இல்லை எனவும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தனர்.

News October 5, 2024

கோவையில் 5% ஊக்கத்தொகை அறிவிப்பு

image

கோவை மாநகராட்சியில், சொத்து வரி 6 சதவீதம் உயர்வு, அக். 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ஏப். – செப். வரையிலான 6 மாதத்துக்கான முதல் தவணை சொத்து வரியை, செலுத்தாமல் இருந்தால், இனி ஒரு சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும், 2வது தவணைக்கான சொத்து வரியை அக். 30-க்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!