Coimbatore

News October 8, 2024

நிதி உதவி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

image

தேக்கம்பட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் திமுக மூத்த முன்னோடி வெள்ளையன் இல்லத்திற்கு
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நேரில் சென்று அவரது உடல் நலம் விசாரித்து நிதி உதவி வழங்கினார். உடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, பா.அருண்குமார் Ex MLA, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் T.R.சண்முகசுந்தரம்,
வழக்கறிஞர் அ.அஷ்ரப் அலி கலந்துகொண்டனர்.

News October 8, 2024

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை

image

கோவையில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கியது. அரசு மருத்துவமனையின் உள்ளே சாக்கடைநீர் கலந்த மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால், ரயிலை பிடிக்கச் சென்ற பயணிகள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

News October 8, 2024

கோவையில் கிரிக்கெட் நடுவராக விண்ணப்பிக்க அழைப்பு

image

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர் மற்றும் ‘ஸ்கோரர்’ தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.இதில், பங்கேற்க விரும்புவோர், நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்படும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

பங்குச்சந்தையில் நஷ்டம்: இளைஞர் தற்கொலை

image

மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் வில்சன. பங்குச்சந்தையில் முதலீடு செய்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அவர் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளார். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் காரணமாக மனமுடைந்த வில்சன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 8, 2024

மின் கட்டணம் ரூ.90 ஆயிரம் உரிமையாளர் அதிர்ச்சி

image

கோவை, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டை ஒட்டியவாறு கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் பரமேஸ்வரனின் வீட்டிற்கு மின் கட்டணம் சுமார் ரூ.19,000 மற்றும் அபராதம் ரூ.71,000 என மொத்தமாக ரூ.90 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

News October 7, 2024

ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு

image

கோவையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் விபத்துக்குள்ளாகி அதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனைத் தடுக்கும் பொருட்டு அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன், இன்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

News October 7, 2024

கோவை மீண்டும் செந்தில் பாலாஜி CONTROL?

image

ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன் கோவை, கரூர் அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பின் கோவைக்கு முத்துசாமி பொறுப்பு அமைச்சரானார். தற்போது செந்தில் பாலாஜி அமைச்சரான நிலையில், அவர் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலத்தை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 7, 2024

கோவை டூ சிங்கப்பூர் விமான சேவை தொடக்கம் 

image

இண்டிகோ விமான நிறுவனம் எதிர்வரும் அக்.27ஆம் தேதி முதல் கோவை-சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவையை தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8:15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம், அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

கோவை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

கோவை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 6382955291, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை அவிநாசி சாலையில் பிரபலமான தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு இன்று திடீரென இணையதளம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் அனைவரும் ஒருவித பீதியுடன் காணப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பந்தயசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!