Coimbatore

News October 10, 2024

கோவை: மாரத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

ஆராதனா மருத்துவமனை சார்பில் உலக எலும்புப்புரை தினத்தை முன்னிட்டு வரும் 20ம் தேதி காலை,6:15 மணியளவில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா முதல் புளியம்பட்டி பி.ஏ.கல்லூரி வரை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.மேலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 99427 77661, 99765 66611 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News October 10, 2024

விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

image

கோவை முதல் சென்னைக்கு விமான கட்டணம் 3300 என இருந்த நிலையில், இன்று மூன்று மடங்கு உயர்ந்து, 3300 இருந்த கட்டணம் இன்று, 11 ஆயிரம் ரூபாயாக விமான நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. இதனாலும் விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட அதிகமாக உயர்த்த பட்டதால் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 10, 2024

சிறப்பு ரயில் சேவை இயக்கம்

image

சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், அக்.10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு புறப்படும் சென்னை சென்ட்ரல் – கோட்டயம் சிறப்பு ரயில் மறுநாள் கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக அக்.11, 13 ஆம் தேதிகளில் இந்த ரயில் கோட்டயத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

கோவையில் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

image

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காணாமல் போன 3 மாணவிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் இருந்து மாயமான மூன்று மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகளை மீட்க தனிப்படையினர் சென்னை செல்ல உள்ளனர்.

News October 10, 2024

வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை அலுவலக நேரங்களில் கிடைக்கும்.

News October 10, 2024

மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம்

image

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வரும் 10ந்தேதி மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் வடவள்ளி சக்தி காமாட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் நடைபெற உள்ளது. இம்முகாமில் பாதாள சாக்கடை இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு, பட்டா பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு

image

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது. ஆகவே விருப்பமுள்ள கோவை பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வருகின்ற அக்-10 முதல் கோவை காந்திபுரம் சி-1காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்

News October 9, 2024

கடந்த 6 மாதங்களில் ரூ.10 கோடி அபராதம் வசூல்

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர், முறையற்ற வகையில் பயணிப்போர், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10,00,82,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

கோவைக்கு மழை இருக்கு

image

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு அடுத்த 2 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த 2 தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்ததால், புறநகர் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

News October 9, 2024

மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தொடர்பு எண் வெளியீடு

image

கோவை மாநகர பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை பாதிப்பு குறித்து புகாரளிக்க மாநகராட்சி நிர்வாகம் அவசர கால உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மைய எண்: 0422-230 2323 வாட்ஸ் அப் எண்: 81900 00200 வடக்கு மண்டலம் – 89259 75980 மேற்கு மண்டலம் – 89259 75981 மத்திய மண்டலம் – 89259 75982 தெற்கு மண்டலம் – 90430 66114 கிழக்கு மண்டலம் – 89258 40945 என்ற எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!