Coimbatore

News November 1, 2024

அரசு அலுவலகங்களிலும்உதயநிதி வைக்க வேண்டும் என்று மனு

image

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக துணை முதலமைச்சர் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம் பெறுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிடுவதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் கோரிக்கை நிர்வாகிகள் மனு இன்று அளித்தனர்.

News November 1, 2024

கோவையில் மது விற்பனை ரூ.90 கோடியை எட்டியது

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி கோவையில் ரூ. 40 கோடிக்கு வர்த்தகம் ஏற்பட்டுள்ளது எனவும் 30ம் தேதி ரூ.50 கோடிக்கு வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் (29.10.24, 30.10.24) ஆகிய இந்த இரண்டு நாட்களில் மது விற்பனை என்பது ரூ.90 கோடியை எட்டி உள்ளது. இது உத்தேச தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

கோவையில் பட்டாசு வெடித்து விபத்து

image

கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீ விபத்துக்கள் ஏற்பட்டது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. இதில் யாருக்கும் காயம் இல்லை. மேலும் 10 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று விடுகின்றனர்.

News November 1, 2024

அகில இந்திய வர்த்தக தேர்வு: ஜிடி பயிற்சி நிறுவன மாணவி சாதனை

image

தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய வர்த்தக தேர்வை நடத்துகிறது. கடந்த ஆக. மாதம் நடந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 29 மாணவர்கள் பல்வேறு பாட பிரிவுகளில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இதில் டூல் அண்ட் டை மேக்கர் (என்எஸகியூஎப்) பாடப்பிரிவில் படித்து வரும் ஜிடி நிறுவன மாணவி அஷ்வினி பேபி ஆச்சார்ய பெண் மாணவர் என்ற முறையில் முதலிடம் பெற்றுள்ளார்.

News November 1, 2024

கோவை: Ex காதலியை போட்டோ காட்டி மிரட்டியவர் கைது

image

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 22 வயது இளம்பெண் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். இவர் 2016 முதல் யுவராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில், யுவராஜ் அவ்வப்போது போட்டோக்களை காட்டி அழைக்கும்போது வர வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் இளைஞர் யுவராஜை நேற்று கைது செய்தனர்.

News October 31, 2024

கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக (மஞ்சள் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 31, 2024

Bloody Beggar: கோவையில் நடிகர்கள் ரசிகர்களுடன் கண்டுகளிப்பு

image

இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள Bloody Beggar திரைப்படம் தீபாவளி நாளான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டிலேயே கோவை பிராட்வே சினாமாவில் காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

தீபாவளி: மக்களே கவனமா கொண்டாடுங்க!

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கோவை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!

News October 30, 2024

தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் 

image

கோவை, கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள கோவை மாவட்ட விஜய் நற்பணி இயக்க தலைமை அலுவலகத்தில், “தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்” சார்பில், இன்று கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பூ மார்க்கெட் சரவணன் அவர்களின் சார்பாக, 3ம் ஆண்டில், 891-வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த மிகச் சிறந்த சேவையானது, பொது மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!