India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் தள்ளுவண்டி உணவு கடைகள் அதிகம் உள்ளன. அவர்களின் ஏழ்மையை கருத்தில் கொண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உணவு பாதுகாப்பு உரிமம் இலவசமாக வழங்கப்படுகிறது. உரிமம் பெற வியாபாரிகள், https://foscos.fssai என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று கோவை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 60 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசாங்கம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை வாங்க ஏதுவாக நாளை ஞாயிற்றுக்கிழமை (27/10/2024 அன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6/11/24 அன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.
கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை கடந்த 1.7.24 முதல் 30.9.24வரை நடத்தப்பட்டது. தற்போது மாணவிகள் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.நேரில் வருகை புரிவோர் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த கவியருவியில் தொடர் மழை காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது, மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், தற்காலிகமாக தடை நீக்கப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு மருதமலை கோவிலில் 31.10.2024 முதல் 3.11.2024 வரை மலைப்பாதையில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மலைப்படிகள் வழியாகவும் பயணம் செய்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன. வயோதிகர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆகவே கோர்ட் அறிவுறுத்தியுள்ளபடி, தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே, குறைந்தளவில் பட்டாசு வெடிக்க வேண்டும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் – பில்லுார் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பவானி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி ஆற்றில் குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டுப்பாளையம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு 350 போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவை மாநகர காவல் துறை இன்று (அக்.25) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வசிப்பவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை மற்றும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். இதனால் உங்களது பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.