India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு வழங்கும் ரேசன் அரிசியில், மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 100 கிலோவுக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து அரிசி கலந்து வழங்கப்படுகிறது. சிலர் இதை, பிளாஸ்டிக் அரிசி என வதந்தியை கிளப்பி விடுகின்றனர். பொதுமக்கள் நம்ப வேண்டாம். அந்த அரிசியை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது, என்று கோவை மாவட்ட பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை நாளை மறுநாள் (அக்.31) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்த காரணத்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (அக்டோபர்.28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (29.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. .
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மலையேறும் பக்தர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது இல்லை வனத்துறை சார்பில் டிரெக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் எனவும், ஆன்மிக பயணத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கோவை ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வந்த Dreams Maker Global என்ற நிறுவனம் ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த ஆதித்யா கமாடிட்டீஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று அதிக வட்டி தருவதாக கூறி ஏராளமான நபர்களிடமிருந்து கோடி கணக்கில் பணத்தைப் பெற்று திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என்றனர்.
வால்பாறை தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு முடித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் சொந்த குடியிருப்புகள் இல்லாமல் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் ஏக்கத்துடன் குடியிருப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதனைத் அரசு பரிசீலனை செய்து மக்களுக்கு குடியிருப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர காவல் துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வாழும் மக்களாகிய உங்களை பாதுகாப்பதே எங்கள் பணி ஆகும். எனவே தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் அல்லது சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர்.
கோவையில் வருமான வரித்துறையினர் கடந்த நான்கு நாட்களாக தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் 15-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், தனியார் நிறுவனங்களில் 4 நாட்களாக ஐ.டி. ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் தற்போது ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிறுவனங்கள் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஓட்டலில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சிரிய மருத்துவமனைகள், சிறிய தொழில் நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் உட்பட 60 தொழில் முனைவோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
புதிய நிறுவனங்கள் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஓட்டலில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சிரிய மருத்துவமனைகள், சிறிய தொழில் நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் உட்பட 60 தொழில் முனைவோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.