Coimbatore

News October 30, 2024

கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை மெமு 06106 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து காலை 09.35 மணிக்கு புறப்படும் மெமு ரயில் திண்டுக்கல்லுக்கு மதியம் 1:10க்கு சென்றடையும். மறு பயணத்தில் 06107 இந்த ரயில் திண்டுக்கலில் மதியம் 2:00 மணிக்கும் புறப்பட்டு மாலை 5:50 க்கும் கோவை சென்றடையும். 

News October 30, 2024

பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம்

image

கோவை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் நலவாரியம் மூலம் சுய உதவிக்குழு பிரதிநிதிகள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான 1 நாள் கருத்தரங்கம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

News October 29, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கோவையில் தனியார் கல்லூரி மாணவன் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து 4வது மாடியில் இருந்து குதித்தில் கை, கால் முறிவு ஏற்பட்டது. ➤கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். ➤கோவையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டத்தில், விதிமுறைகளை மீறிய 32 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

News October 29, 2024

இந்த வருடத்தில் 61 நபர்கள் மீது குண்டர்

image

கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

புலி நடமாட்டம் உறுதி

image

கோவை வனப்பகுதியை ஒட்டிய ஊர்களில் புலி நடமாட்டம் இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதை அறிய 400 தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவையை ஒட்டிய வனப்பகுதியில் புலிகள் நடமாடி போளுவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் சில மாதங்களாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள வனத்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

News October 29, 2024

கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீடு

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஷர்மிளா, கோட்டாட்சியர்கள் கோவிந்தன், சிவகுமார் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

கோவையில் அதிர்ச்சி: பள்ளியில் ராகிங்!

image

கோவை அவினாசி ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் நேற்று +1 மாணவர் ஒருவர், 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தனது காலில் விழவைத்து ராகிங் செய்து கொண்டிருந்தார். இதை 6ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு +1 மாணவர், நீ எப்படி ஆசிரியர்களிடம் சென்று கூறலாம் என்று 6 வகுப்பு மாணவனை தாக்கினார். இதுகுறித்து பந்தய சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 29, 2024

மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அறிவிப்பு

image

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மொத்தம், 2 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர், 12ம் தேதி காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது. இதனை நேற்று மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

News October 29, 2024

கோவை: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 4 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகளும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 540 பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 1030 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!