India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கோவை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!
கோவை, கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள கோவை மாவட்ட விஜய் நற்பணி இயக்க தலைமை அலுவலகத்தில், “தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்” சார்பில், இன்று கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பூ மார்க்கெட் சரவணன் அவர்களின் சார்பாக, 3ம் ஆண்டில், 891-வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த மிகச் சிறந்த சேவையானது, பொது மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை ராமநாதபுரம் பகுதியில் முளைப்பாரி ஊர்வலத்துடன் சென்று முத்துராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு, குழந்தைத் திருமணம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் எண், 1098-க்கு உண்மையான, உறுதியான, அதிகாரப் பூர்வமான தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானத் தொகையாக 2,000 ரூபாய் கலெக்டரின் பொது நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி கோவையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கோவை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அழகரசு கூறுகையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எங்களது குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர் என்றார்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி, நவம்பர் 1ஆம் தேதி இரு தினங்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தீபாவளி அன்று காலை மழை செய்யும் என்பதால் தீபாவளி கொண்டாடும் கோவை மக்கள் சற்று கலக்கத்துடன் உள்ளனர்.
தீபாவளி ஷாப்பிங் செல்பவர்கள் கடைகளின் மீது மட்டும் பார்வையை வைக்காமல் தங்களது உடைமைகள் மீதும் அவ்வப்போது பார்வையை வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி உங்களது உடைமைகளை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது என கோவை மாநகர போலீசார், மக்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர்களது முகநூல் பக்கத்தில் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம் உள்ளிட்ட பேருந்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இந்த அட்டவணையை கவனித்து பயணத் திட்டம் மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் ஒருவருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. ரூ.2,465 தான் வசூலிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியுள்ள நிலையில் கட்டணம் ரூ.3,399 ஆக உள்ளது. அதேபோல் ஏசி இல்லாத (Seater)பஸ்சில் சென்னை – கோவை டிக்கெட் விலை ரூ.1,720 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.