India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களுக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அக்., 28 முதல், 31 வரை நான்கு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயங்கின. இவற்றின் மூலம் கோவை மாவட்டத்தில் இருந்து, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா உள்ள ஏனாத்து என்ற இடத்தில் உள்ள கல்லாடா ஆற்றில் குளித்த யாத்ரீகர் குழுவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் கோவை கணபதி சேர்ந்த செபிருல்லா, செலினா மகன் முஹம்மது ஸ்வாலிஹ் (10), போத்தனூரைச் சேர்ந்த நசீர், சௌதா ஆகியோரின் மகன் அஜ்மல் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது மேலும் இவர்கள் உடல் கோவை வந்து கொண்டுள்ளது.
கோவையில் நவ 5 மற்றும் 6ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை அவருக்கு புரிந்து எல்காட் நிறுவனத்தை திறந்து வைக்க உள்ளார். கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் 2.86 ஏக்கரில் ₹114.16 கோடி முதலீட்டில் இந்த எல்காட் பூங்கா கட்டப்பட்டுள்ளது. கோவையின் அடுத்த கட்ட ஐடி துறை வளர்ச்சிக்கு மேலும் இதனால் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக துணை முதலமைச்சர் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம் பெறுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிடுவதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் கோரிக்கை நிர்வாகிகள் மனு இன்று அளித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி கோவையில் ரூ. 40 கோடிக்கு வர்த்தகம் ஏற்பட்டுள்ளது எனவும் 30ம் தேதி ரூ.50 கோடிக்கு வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் (29.10.24, 30.10.24) ஆகிய இந்த இரண்டு நாட்களில் மது விற்பனை என்பது ரூ.90 கோடியை எட்டி உள்ளது. இது உத்தேச தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீ விபத்துக்கள் ஏற்பட்டது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. இதில் யாருக்கும் காயம் இல்லை. மேலும் 10 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று விடுகின்றனர்.
தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய வர்த்தக தேர்வை நடத்துகிறது. கடந்த ஆக. மாதம் நடந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 29 மாணவர்கள் பல்வேறு பாட பிரிவுகளில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இதில் டூல் அண்ட் டை மேக்கர் (என்எஸகியூஎப்) பாடப்பிரிவில் படித்து வரும் ஜிடி நிறுவன மாணவி அஷ்வினி பேபி ஆச்சார்ய பெண் மாணவர் என்ற முறையில் முதலிடம் பெற்றுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 22 வயது இளம்பெண் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். இவர் 2016 முதல் யுவராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில், யுவராஜ் அவ்வப்போது போட்டோக்களை காட்டி அழைக்கும்போது வர வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் இளைஞர் யுவராஜை நேற்று கைது செய்தனர்.
தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக (மஞ்சள் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள Bloody Beggar திரைப்படம் தீபாவளி நாளான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டிலேயே கோவை பிராட்வே சினாமாவில் காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.