Coimbatore

News November 3, 2024

கோவை: போலீசார் திடீர் ரெய்டு

image

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினர். உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கி உள்ள அறைகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் 4 பிரிவாக பிரிந்து இன்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சோதனை நடந்தது.

News November 3, 2024

கோவையில் 15 நபர்களை கைது செய்த போலீசார்

image

கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடிக்க கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகள் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பட்டாசு வெடித்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 3, 2024

கோவை மாணவனை பாராட்டிய மெட்டா

image

இன்ஸ்டாகிராம் செயலியின் கமெண்ட் பகுதியை செயலிழக்கச் செய்யும் மிகப்பெரிய சிக்கலை கவனத்திற்கு கொண்டு சென்ற கோவை பொறியியல் கல்லூரி மாணவருக்கு மெட்டா நிறுவனம் வெகுமதி அறிவித்ததோடு, சிறந்த அவரது செயலை பாராட்டும் விதமாக மெட்டா நிறுவனம் அவருக்கு வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சிறந்த ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் மெட்டா நிறுவனத்தின் Hall of Fame பட்டியலிலும் மாணவர் பிரதாபின் பெயரை இணைத்துள்ளது.

News November 2, 2024

கோவை TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக, நவம்பர் 2024 மாதத்திற்கான பயிற்சி (05.11.2024) அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336, 0422-6611226 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

மருதமலை படிக்கட்டுகளில் வர தடை

image

முருகனின் 7-வது படைவீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி துவங்கியுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்களில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, மருதமலை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் கூட்டமாக திரிவதால் தற்போது மாலை 5 மணிக்கு மேல் படிக்கட்டுகளில் கோவில் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

News November 2, 2024

கோவைக்கு வரும் விஜய்: எப்போது தெரியுமா?

image

தவெக மாநாடு தற்போது முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 237 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிச. 27 முதல் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் கோவையில் முதல் பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 2, 2024

கோவையில் விஜய்யின் முதல் சுற்றுப்பயணம்?

image

தவெக மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 அன்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரண்டு வந்தனர். விஜயின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவும் வெறுப்பும் தெரிவித்திருந்தனர். தற்போது தவெக கட்சித் தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணமாக கோவையில் ஆரம்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 2, 2024

முக்கிய விவகாரம்: MLA கோவை கலெக்டருக்கு கடிதம்

image

மழைக்காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீரை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோதவாடி தேவம்பாடி குளங்களுக்கு, கால்வாய்கள் வாயிலாக தண்ணீர் திறந்து விட்டு நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், ஆறு மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது. அதனால், இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியருக்கு பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் கடிதம் அனுப்பியுள்ளார்.

News November 2, 2024

தொடர் விடுமுறையால் ஈஷாவில் குவிந்த பக்தர்கள்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள் முழுமையாக சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் மிகவும் பிரபலமான ஈஷாவில் பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News November 2, 2024

கோவை கலெக்டர் எச்சரிக்கை

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவையில் செயல்படும் முதியோர் இல்லங்கள், விடுதிகள் ஆகியவற்றை அரசாணை எண் 83இன் படியும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007இன் படியும் மாவட்ட சமூகநல துறையின்கீழ் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள், விடுதிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!