Coimbatore

News November 11, 2024

பாஜக நிர்வாகி ஏ.பி.முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்

image

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், கடந்த 2016ல் மாமனார் சுந்தரசாமி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் விடுத்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அடுத்த வழக்கு விசாரணைக்குள் நீதிமன்றத்தில் முருகானந்தத்தை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

News November 11, 2024

பேரூராட்சி சார்பில் வித்தியாசமான விழிப்புணர்வு வாசகம்

image

சூலூர் ஒன்றியம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவனம் இருக்கும் வாசகம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதிகளிலும் சாலை ஓரங்களிலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக, நடிகர் வடிவேலு காமெடியில் வருவதை போல, ‘உங்க வீடு தேடி வந்து குப்பை வாங்குறோமே, அப்புறம் ஏன் பொது எடத்துல வந்து குப்பையை கொட்டுறீங்க? எனும் காமெடி பாணியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

News November 11, 2024

அதிமுக தொடக்கவிழா பொதுக்கூட்டம்

image

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, மதுக்கரை ஒன்றியம் வெள்ளலூர் பேரூராட்சியில், நடைபெற்ற அதிமுக கட்சியின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி அதிமுக கொறடா எஸ்பி வேலுச்சாமி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ, திரைப்பட இயக்குநர் கழக கலை பிரிவு செயலாளர் ஆர்.வி.உதய குமார், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

News November 11, 2024

கோவை: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்

image

திமுக செய்தித் தொடர்பு துணைச்செயலாளர் கோவை செல்வராஜ் ex எம்எல்ஏ மறைவையொட்டி லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ. ரவி, மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ் ஜெயந்தி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் சோமு (எ) சந்தோஷ் இருந்தனர்.

News November 10, 2024

சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு

image

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண் சாலைகளை, தார் ரோடாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு நிதி பெறுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். மோசமாக உள்ள மண் சாலைகள், கவுன்சிலர்கள் கூறும் இடங்களில் உள்ள சாலைகளை கள ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் ரோட்டை தேர்வு செய்து சமர்ப்பிக்க, உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 10, 2024

அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது

image

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News November 10, 2024

கோவை மூன்று நாட்களுக்கு மழை இல்லை

image

கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை, பெரிய அளவில் மழை இருக்காது. வரும் 13ஆம் தேதி, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கில் அதிகபட்சமாக 4.9 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். அதே நாளில், கிணத்துக்கடவு 4.1, , சுல்தான்பேட்டை 3.6, காரமடை 2.8, அன்னூர் 2.1, தொண்டாமுத்தூரில் 2.1 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என கோவை வேளாண் பருவநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News November 10, 2024

கோவையில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

➤பேரூர், திருவாவடுதுறை ஆதினக் கிளை மடம் சார்பில் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழா இன்று நடக்கிறது. ➤கோவைப்புதூர் சங்கரா கிருபா மையத்தில் இன்று மாலை கர்நாடிக் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ➤காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பள்ளியில் “நம்ம ஊரு சந்தை” இன்று நடக்கிறது. ➤பேரூர் படித்துறையில் இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை களப்பணி நடக்கிறது.

News November 9, 2024

கோவை:  இதுவரை 62 பேர் மீது குண்டாஸ்

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று மாலை விடுத்த செய்தி குறிப்பில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 62 பேர் மீது குண்டூர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 9, 2024

கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி

image

கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி – கோவை பெக்ஸ், 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய தேதிகளில் சுகுணா திருமண மண்டபம், அவினாசி ரோடு, பீளமேடு,நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!