India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறிய அளவிளான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15.11.2024 அன்று காலை 10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது என்றார்.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருட்தந்தை ஜோ அருண் தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தில் செயல்படுகின்ற முன்னணி மருத்துவமனைகளான கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இன்று மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து கோவை மாவட்ட வெடிகுண்டு செயல் இழப்பு படை போலிசார் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் வழக்கம் போல பொய்யான தகவல் என திரும்பி சென்றனர்.
தேசிய அளவிலான உடற்கட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று மாஸ்டர்ஸ் பிரிவில் மிஸ்டர் இந்தியா 3வது இடம் பெற்று வெண்கலம் பதக்கம் வென்ற தமிழ்நாடு மற்றும் கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 25 வருட உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மேட்டுப்பாளையம் ஆரோக்கியா அப்துல் ரஹீம் அவருக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் முதல் தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 64 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 10,089 பயணிகள் வந்து சென்றதும், ஒரே நாளில் அதிகபட்ச சர்வதேச பயணிகள் எண்ணிக்கை பதிவானது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, மதுக்கரையில் உள்ள கணபதி மகாலில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மதுக்கரை நகர ஒன்றிய ரஞ்சித்குமார், மதுக்கடை நகர தலைவர் வினோத் குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு சென்ற நான்கு மையங்களில் இரு இடங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அவ்விருவரிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்ட அமைச்சர் நகர் நல மையம் செயல்படும் நேரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் உடன்குடியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதன் இடையே, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது மாணவிகளுக்கு மது கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இந்த வழக்கில் நேற்று ஆசிரியரை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் தற்பொழுது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொண்டு உள்ளனர். இதனால் இந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தைப் பற்றியும் அதன் பலன்கள் குறித்தும் 400 முகாம்களை நடத்தினோம். இம்முகாம்களை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் தமிழ்புதல்வன் திட்டத்தில் பலர் இணைந்தனர். அதனால்தான் இத்திட்டத்தில் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக கோவை திகழ்கிறது என்று கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.