Coimbatore

News November 14, 2024

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும். விபரங்களுக்கு 0422- 2642388 என்ற எண்ணை அழைக்கலாம்.

News November 14, 2024

இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற பேராசிரியர் கைது

image

வடவள்ளி பகுதியில் இளம் பெண்ணை, பேராசிரியர் சிவபிரகாசம், என்பவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இளம் பெண் இது குறித்து ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேராசிரியர் சிவபிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2024

தொலைந்து போன 252 மொபைல் போன்கள் நாளை ஒப்படைப்பு.

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்த செய்தி குறிப்பில் நாளை(நவ.14) காலை 11 மணியளவில் கோவை எஸ்பி கார்த்திகேயன் புறநகர் பகுதிகளில் தொலைந்து போன ரூ.48,36,500 மதிப்பிலான 252 மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 13, 2024

2023-24ம் ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் அறிவிப்பு

image

கோவை, தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி தமிழக அரசின் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசு பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு நாளை (14.11.2024) காலை 8.00 மணியளவில் சென்னை-04, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில்  பள்ளிக் கல்வி துறை அமைச்சர் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளார்.

News November 13, 2024

கோவை அரசு மருத்துவமனையில் நாளை போராட்டம் 

image

சென்னை-கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவரது மகன் விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தினார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் இன்று மதியம் முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை போராட்டம் தொடரும் என்றனர்.

News November 13, 2024

கோவை விமான நிலையத்தில் இபிஎஸ்ஸுக்கு வரவேற்பு

image

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கோவை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

News November 13, 2024

பாஜக தேசிய இளைஞரணி தலைவருக்கு வரவேற்பு

image

கோவை மாவட்டத்திற்கு பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜவ் சூர்யா வருகை புரிந்துள்ளார். நேற்று கோவை விமான நிலையம் வந்த அவரை கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.ரமேஷ்குமார் ஆலோசனைப்படி, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத் நேரில் சென்று வரவேற்பு அளித்தார். அவருடன் கோவை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News November 13, 2024

கோவையில் கார் குண்டுவெடிப்பு: NIA தீவிரம்

image

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ஆம் ஆண்டு அக்., 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேரை நேற்று அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ. முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

News November 13, 2024

கோவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில், இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஓரிரு இடங்களில் 2 மி.மீ. மழை பெய்யக்கூடும். நாளை, ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெ.நா.பாளையம், பொள்ளாச்சி சராசரியாக 7 முதல் 9 மி.மீ. மழை பதிவாகலாம் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News November 13, 2024

அதிக ஏடிஎம் கோவைக்கு ஒன்பதாவது இடம்

image

இந்தியாவில் அதிக ஏ.டி.எம்.களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட அளவில், இந்திய அளவில் கோவை 9வது இடத்தில் உள்ளது. இதில், 29 ஆயிரத்து 965 ஏ.டி.எம்.களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நகரங்கள் மற்றும் மாவட்ட அளவில் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 360 ஏ.டி.எம்.கள் உள்ளன. வட இந்திய மாநிலத் தலைநகர்களை விடவும், கோவை மாவட்டத்தில் அதிக ஏ.டி.எம்.கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!