India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி விடுத்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதிகள் உடையவர்கள் நவ.30க்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை – 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில் மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகளுக்கு தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்று திறனாளிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். 0422 – 2380381 மற்றும் 9499933471 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ஜே.எம்:3, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 28 வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அருண்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை கோவை மாவட்ட அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று ஒப்படைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டதாக கூறிய அவர், காவல்துறையின் இந்த நடவடிக்கையால் கல்லூரி மாணவர்களிடையேயான போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளதாக கூறினார்.
கோவை மாவட்டத்தில், கோயம்புத்தூர் விழா நவம்பர் 23 முதல் டிசம்பர் 1, 2024 வரை நடைபெற உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக, இரண்டு டபுள் டக்கர் பேருந்தில் கோவை நகரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை www.coimbatorevizha.theticket9.com-ல் பதிவு செய்து கொள்ளலாம்; முன்பதிவிற்கு 7010708031 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் இன்று மலையில் உள்ள ஒரு பாறையின் மீது சிறுத்தை ஒன்று இன்று இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ள மலையில் சிறுத்தை தென்பட்டுள்ளதால் ஊருக்குள் வருவதற்கு முன்பு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌர்ணமி, அம்மாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. அதன்படி கோயமுத்தூர் மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களுக்கு சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று 460 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பத்தின் எதிரொலியாக, இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் மருத்துவர்கள் பலர் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 7% வட்டியில் 20 லட்சம் வரை குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கோவையை சேர்ந்த ஆர்வமுள்ள நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு (ம) மார்ட்டின் குழும அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இரு கார்களில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.