Coimbatore

News November 16, 2024

கோவையில் நிலம் மோசடி: 5 போ கைது

image

கோவை சுந்தராபுரம் பகுதியை சோ்ந்தவர் விஜயகுமாா். இவர் தனது சகோதரா் வேணுகோபாலுடன் சோ்ந்து 2006ஆம் ஆண்டில் குறிச்சியில் நிலம் வாங்கினாா். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகம் சென்று பார்த்தபோது பத்திரம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவை சிட்டி போலீசார் முபாரக் அலி, பாக்கியம், சாந்தி, கெளதமன், நிஷாா் அகமது ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News November 16, 2024

கோவை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

கோவை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை (நவ.16, நவ.17) சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நவ.23, நவ.24 ஆகிய தேதிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து திருத்தங்களும் செய்து கொள்ளலாம்.

News November 16, 2024

கோவையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

(1).வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுவதை தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை கலெக்டருமான கிராந்திகுமார் பாடி காலை 10 மணிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியில் ஆய்வு செய்கிறார். (2).தொடர்ந்து 10.30 மணிக்கு ரேஸ்கோர்ஸில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். (3).கோவை ஐயப்பன் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கிய பக்தர்கள். 

News November 16, 2024

கோவையில் தொடரும் ரெய்டு

image

துடியலூரில் தொழிலதிபர் மார்ட்டின் இல்லம், அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மார்ட்டின் உறவினர் இல்லங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையின் சோதனையானது தொடர்கிறது; மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News November 16, 2024

கோவை: தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

image

வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். தென்னைமர காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகள் செலுத்தும் பிரீமியத்தில் 50% மாநில அரசு வழங்கி விடும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். காப்பீடு நிறுவனத்தை 9843007436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

ஈசா வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

image

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநில குழு சார்பாக, மர்ம தேசமாக விளங்கும் கோவை ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் நடப்பது என்ன எனவும், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஈசா மீது பதியப்பட்டுள்ள வழக்குகள், கைவிடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23ம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இன்று திட்டமிட்டனர். 

News November 15, 2024

கோவைக்கு வருகின்றது புதிய தீயணைப்பு நிலையம்

image

தமிழக அரசு தமிழத்தில் கோவை உட்பட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணையை இன்று வெளியிட்டது. அதிலு கோவை மாவட்டத்திற்க்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக உள்ளது. இதில் ஒரு தீயணைப்பு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2024

கோவை கோ – ஆப்டெக்ஸில் மெகா தள்ளுபடி

image

கோவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மெகா கிளியரன்ஸ் விற்பனை, கோவை மருதம் விற்பனை நிலையத்தில் வரும் 30ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பட்டுப்புடவைகள், பருத்தி சேலைகள், மென்பட்டு, காட்டன், இயற்கை பருத்தி காட்டன், காஞ்சி காட்டன், பரமக்குடி காட்டன் உள்ளிட்ட பல்வேறு ரகங்களுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனை பயன்படுத்த முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு : 99448 45919.

News November 15, 2024

கோவை: 18 தாபாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சீல்

image

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தாபாக்கள், ரெஸ்டாரெண்டுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 தாபாக்களில் மது விற்பனை செய்த தாபாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சீல் வைக்க எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் வருவாய் துறையினர், போலீசார் இணைந்து இன்று சீல் வைத்து வருகின்றனர்.

News November 15, 2024

காச்சிகுடா – கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

image

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் காச்சிகுடா – கோட்டயம் வாராந்திர சிறப்பு ரயில் காச்சிகுடாவில் இருந்து கோவை வழியாக 21, 28ஆம் தேதிகளில் மாலை புறப்பட்டு மறுநாள் மாலை கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து கோவை வழியாக இன்று, 22, 29ஆம் தேதி இரவு புறப்பட்டு மறுநாள் இரவு காச்சிகுடா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!